• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அஜய் கார்த்தி – தீபா பாலு நடிக்கும் ஸ்டேஷன்

by Tamil2daynews
November 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அஜய் கார்த்தி – தீபா பாலு நடிக்கும் ஸ்டேஷன்

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் காதல் உணர்வுகள் எனப் பல சுவாரசியமான அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு துடிப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான A. வெங்கடேஷ், திரிடம் (Dridam) மலையாள படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா மற்றும் சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதற்காக, சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் காட்சியமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘STATION – Hunt For Survival’ திரைப்படம் உருவாகி வருகிறது.
படக்குழுவினர்:
எழுத்து & இயக்கம்: மாறன் கார்த்திகேயன்
தயாரிப்பு: கே. தினேஷ் குமார்
ஒளிப்பதிவு: சுபாஸ் பாரதி
இசை: அருண் ராஜ்
கலை இயக்கம்: அய்யப்பன் S
சண்டைப் பயிற்சி: பிரபு ஜாக்கி
ஆடை வடிவமைப்பு: தினேஷ் பாபு G V
படத்தொகுப்பு: முத்தையன் U
நிர்வாகத் தயாரிப்பு: விக்கி ஆண்ட்ரு
VFX மேற்பார்வை: சரவண பாலாஜி K – Time Stone FX
மார்க்கெட்டிங்: Digitally Powerful
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் – S2 Media
புதிய கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் KP INFOTAINMENT நிறுவனம், ‘STATION – Hunt For Survival’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்கிறது.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காதல், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் திரைப்படமாக ‘STATION – Hunt For Survival’ உருவாகி வருகிறது.
Previous Post

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்!

Next Post

பிளாக் கோல்டு – விமர்சனம்

Next Post

பிளாக் கோல்டு - விமர்சனம்

Popular News

  • கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

November 15, 2026

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

November 15, 2026

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

November 15, 2026

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 15, 2026

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)!

November 15, 2026

ஃப்ளாக் (FLAG) – விமர்சனம்

November 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.