• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சன்னி லியோன் நடிக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG), ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

by Tamil2daynews
April 7, 2022
in சினிமா செய்திகள்
0
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சன்னி லியோன் நடிக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG),

ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

 

திரையுலகில் வெகு சில படங்கள் மட்டுமே தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே, பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும்.  துல்லியமாக  சொல்வதானால், படத்தின் தலைப்பு  படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக மாறும். அந்த வகையில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” அதன் தொடக்கப் புள்ளியில் இருந்தே ரசிகர்களின்  எதிர்பார்ப்புகளை பெற்ற படைப்பாக இருந்தது.  இரண்டு முக்கிய வேடங்களில் அழகான சன்னி லியோன் தோன்றுவது, முற்றிலும் புதியது, தனித்துவமானது மற்றும் அவரது முந்தைய திரைப்படங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், புதுமையான இந்த ஃபர்ஸ்ட் லுக் இந்திய பார்வையாளர்களிடம்  பாராட்டுகளைப் பெற்று, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் எழுத்தாளரும், இயக்குனருமான R யுவன் கூறும்போது…, “ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து அன்பான வரவேற்பைப் காண மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சன்னி லியோன் மேடத்தின் அர்ப்பணிப்புக்கு நன்றி. இந்த படத்திற்காக, அவர் தனது பாத்திரத்தை  சிறப்பாக செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார், இது அவர் இதுவரை செய்ததில் இருந்து புதியது மற்றும் முற்றிலும் தனித்துவமானது என்று அவர் தீவிரமாக நம்பினார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம், இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் திரையரங்குகளில்  பார்வையாளர்களுக்கு ஒரு  சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். இதில்  சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்று பின்னணி  இருப்பதால், அவரது தோற்றம் முற்றிலும் கற்பனையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது  படத்திற்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும்.
“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவிலான திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Previous Post

வெங்கட்பிரபு இயக்கும் இருமொழிப் படம்..!

Next Post

ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.