• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’

by Tamil2daynews
May 14, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’

 

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.
கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம்  ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV
கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர்  ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது.

Previous Post

சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!

Next Post

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டியின் இன்னொரு முகம்

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டியின் இன்னொரு முகம்

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

October 22, 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

October 22, 2026

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

October 22, 2026

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

October 22, 2026

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

October 22, 2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

October 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.