சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!
பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.
கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முகுந்தன் ராமன் பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் சிவம் இந்த பாடலை பாடியுள்ளார் .