நுட்பமான கதாபாத்திரங்கள்… மனதிற்கு இதமான இசை… மறக்க முடியாத சாலை பயணம்… பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காஃபி’யை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள்…!
நடிகைகள் லட்சுமி மற்றும் மது போன்ற அனுபவம் மிக்க நட்சத்திர நடிகைகள், பல ஆண்டுகளாக வணிக சினிமாவில் நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பவர்கள். இவர்கள் இயல்புக்கு மீறிய.. வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களில் நடிப்பதை பார்ப்பது என்பது .. திறமையான கலைஞர்கள் என்ற வகையில் அவர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். இதையும் கடந்து, எல்லைகளை தாண்டி பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடைய வேண்டிய தனித்துவமான கதைகளை விவரிக்கும் ‘ஸ்வீட் காரம் காஃபி’ போன்ற இணைய தொடர்களில் நடித்திருப்பதால் அதன் தரமும், சுவையும் உயர்கிறது. லட்சுமி நடித்திருக்கும் ஜூலி படத்தினை போல்.. மது நடித்திருக்கும் ரோஜா படத்தை போல்.. பரவலாக விரும்பப்படும் கதாபாத்திரங்களில் இவர்கள் நடித்திருப்பதால், இந்த இணையத்தொடரை காணும் ஆவல் நிச்சயம் அதிகரிக்கும்.
பெண்களின் கோணம்
சுந்தரி ( லட்சுமி), காவேரி ( மது), நிவேதிதா ( சாந்தி) என பாட்டி, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் ஆணாதிக்கத்துடன் தினமும் போராடுகிறார்கள். சுந்தரியின் வழக்கத்திற்கு மாறான ஆசைகள்… தன்னையே அதிகமாக நேசிக்கும் காவேரி… தொழில் மீது பேரார்வத்தை செலுத்தும் நிவேதிதா.. என எதுவாக இருந்தாலும் சரி இவை மூன்றுமே நம்முடைய சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால், நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்து ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த மூன்று பெண்களின் எளிய தேவைகள் சமூகத்தால் நிராகரிக்கப்படும் போது, அவர்கள் உண்மையிலேயே தகுதியான சுதந்திரத்தையும்.. இடத்தையும் வழங்குவதற்கு நம் உலகம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதனை நாம் உணர்கிறோம்.
மனதை மயக்கும் இசை
‘ஸ்வீட் காரம் காஃபி’ எனும் இணைய தொடரின் இசை ஆல்பம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம்- பாடல்களும், இசைக்கருவிகளின் ஊடான கருத்துரு இசையும் கலந்த கலவையாகும். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த ஆல்பத்தில் பிரபல பாடர்களான ஜாவேத் அலி, ஆதித்யா ராவ், கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் மற்றும் சத்ய பிரகாஷ் உள்ளிட்ட பாடகர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்மாவை தூண்டும் இசையுடன் இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருப்பது நம்முடைய செவிகளுக்கு சிறந்த விருந்தாகும்.
தங்களை தாங்களே கண்டறிந்து கொள்ளும் கசப்பான பயணம்
மூன்று தலைமுறைகளுக்கிடையேயான கதை வெவ்வேறு தலைமுறைகளை சார்ந்த மூன்று பெண்கள்.. ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் அவர்களுக்கு எதிராக, தங்கள் வாழ்வில் இணையாக செயல்படுவதை பார்க்கும் போது புத்துணர்வு கிடைக்கிறது. ‘ஸ்வீட் காரம் காஃபி: ஒவ்வொரு வயதுடைய பெண்கள்.. அவர்களின் வயதை மீறி எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்.. வாழ்க்கையை எப்படி காதலிக்கிறார்கள்.. அவர்களின் கதைகளை எப்படியெல்லாம் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஏற்றவை என்ற சாராம்சத்தை கொண்டிருப்பதால், இது இந்த இணைய தொடர் உங்களை எளிதாக இணைத்துக் கொள்கிறது. இந்தத் தொடர் உங்களை சுற்றியுள்ள பெண்களின் யதார்த்த வாழ்வியலை பிரதிபலிப்பதால்.. இதனை காணும் போது உங்களுடைய இதயம் கனக்கிறது.