ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காட்ஃபாதர்’ பட வெற்றி- நன்றி சொன்ன நயன்தாரா!

by Tamil2daynews
October 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காட்ஃபாதர்’ பட வெற்றி- நன்றி சொன்ன நயன்தாரா!

 

‘காட்ஃபாதர்’ படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய சினிமா பார்வையாளர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி. திரையரங்குகளில் இந்தப் படத்தை அன்போடு    நீங்கள் கொண்டாடி மகிழ்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘காட்ஃபாதர்’ படத்திற்கு பின்னால் உழைப்பை கொடுத்து வேலை செய்த குழு, என் நண்பர்கள் என அனைவராலும் இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக எப்போதும் இருக்கும்.

தன்மையான குணம் கொண்ட, நடிப்பில் மிரட்டி எடுக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி அவர்களுடன் மீண்டும் ஒருமுறை படத்தில் இணைந்து நடித்திருப்பது எனக்கு பெருமையான விஷயம். செட்டில் அவருடன் இருந்த ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது. சிரஞ்சீவி சாருக்கு நன்றி.

என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன்ராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

‘சத்யப்பிரியா’ பல அடுக்குகள் கொண்ட சிக்கலான கதாபாத்திரம். இயக்குநர் என் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, திரையில் என்னால் அதனை திறமையாக செய்து முடிக்க முடிந்தது. சல்மான்கான் அவர்களை நடிகராக அனைவருக்கும் ஏன் அதிகம் பிடித்திருக்கிறது என்பதை இந்தப் படம் மூலம் நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் திறமையான நடிப்பின் மூலம் இந்தப் படத்தை இன்னும் அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்றதற்கு நன்றி சார்.
என் திறமையை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றும் என்னுடைய சக நடிகர்களுக்கு என்னுடைய அன்பும் மரியாதையும். இந்தப் படத்தில், சத்யதேவ் மற்றும் என்னுடைய தங்கையாக நடித்திருந்த தான்யாவையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

இசையமைப்பாளர் தமன் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷார் சார் இருவரும் தங்களது அபாரமான திறமையான பணியால் ‘காட்ஃபாதர்’ உலகத்தை இன்னும் அற்புதமாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றி. கடின உழைப்பை கொடுத்த படத்தின் மொத்த குழுவுக்கும் பாராட்டுகள்.

RB செளத்ரி சார் மற்றும் NV பிரசாத் இருவரும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக்கியதற்கு நன்றி. எந்தவொரு டெக்னீஷியனும் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள விரும்பக்கூடிய பிரம்மாண்ட தயாரிப்பாளர்கள் நீங்கள். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ அணியினர் அனைவரின் கடின உழைப்புக்கு நன்றி மற்றும் நூறாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் என்னுடைய வாழ்த்துகளும். Konidela Production Company உடன் இணைந்து வேலை பார்த்ததில் மகிழ்ச்சி.

இறுதியாக, இந்த திருவிழா காலத்தில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிகப் பெரிய நன்றி!!

Previous Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

Next Post

உலக நாயகன் வெளியிட்ட DSP யின் ‘ஓ பெண்ணே’ ஆல்பம் பாடல்..!

Next Post

உலக நாயகன் வெளியிட்ட DSP யின் 'ஓ பெண்ணே' ஆல்பம் பாடல்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலிர்க்க வைக்கும் காட்சிகளில் அதிரும் ‘ஓநாய்’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்

June 1, 2023

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது

June 1, 2023

‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 1, 2023

கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

June 1, 2023

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’

June 1, 2023

‘துரிதம்’ – விமர்சனம்

June 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!