• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும்  தெருக்கூத்து நிகழ்ச்சி..!  

by admin
April 26, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும்  தெருக்கூத்து நிகழ்ச்சி..!  
3
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சென்னையில்  நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில்  வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து  வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.
திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார். மேலும் தமிழ் மன்னர்களின்  வரலாற்றையும் சமகால அரசியலையும்  பேசக்கூடிய கலையாகவும்  மேம்படுத்தி தெருக்கூத்து வடிவில் மக்களிடம் சேர்த்து வருகிறார்..
அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தி இருந்தார்.
தற்போது  நந்தி வர்மனின் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில்  வரும் 28 ஆம் தேதி Sunday காலை 10 மணி மற்றும் மாலை 3:30 மணி என இரு காட்சிகளாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், திரைத்துறையினர் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
தொடர்புக்கு : சங்ககிரி ராஜ்குமார் –  97152 51055,  956657524
 
———————————————————————————————
 
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சங்ககிரி ராஜ்குமார் வெங்காயம் திரைப்பட இயக்குனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருகிறேன்.
     திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில்  தயாரித்து வருகிறோம்.
( அதற்கான இணைப்பு: https://youtu.be/FlFPIxO7v1c  )
     நமது தமிழ் மன்னர்களின்  வரலாற்றையும் சமகால அரசியலையும்  பேசக்கூடிய கலையாகவும்  மேம்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகிறோம்.
( அதற்கான இணைப்பு: https://youtu.be/TYBuB4kwWLY )
     அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தினோம்.
  *  தற்போது , இந்நிகழ்ச்சி 28/04/ 2019 ஞாயிற்றுக்கிழமை, சென்னை- தி நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் ஹாலில் காலை 10 மணி, மாலை 3: 30 மணி என்று இரண்டு காட்சிகளாக நடத்தவிருக்கிறோம்.*
    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், திரைத்துறையினர் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி நடக்கவிருக்கும் செய்தியை மக்களிடம் முன்கூட்டி கொண்டு சேர்க்கவும் நிகழ்ச்சி நடக்கும் பொழுது வந்திருந்து நிகழ்ச்சியை பதிவுசெய்து மக்களிடம் கொண்டு செல்லவும் தங்களை அன்போடு அழைக்கிறேன்.
நன்றியுடன்
சங்ககிரி ராஜ்குமார்  (வெங்காயம் திரைப்பட இயக்குனர்)
செல் : 97152 51055,  956657524
[email protected]
Previous Post

ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பான வேண்டுகோள்!

Next Post

இகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி

Next Post
இகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி

இகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி

Popular News

  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.