• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்

by admin
May 8, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .

லதா ரஜினிகாந்த் அவர்கள் கூறியவை :
Latha mam Speech at Peace for children event..m4aதற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை .

உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .

அந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும் . ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது . தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது . குழந்தைகள் பாதுகாப்பு ,அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் .ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை , விழிப்புணர்வை லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம் .

குழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பிலோ உள்ளது ஒருவருடைய கண்பார்வையிலேயே இருக்க வேண்டும் . எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது .நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான் . இந்த குழந்தை பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும் .
தற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து இட்டது . பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் . இதனால் கூட குழந்தைபாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது .

எங்கள் பீஸ் பார் சில்ரன் (PEACE FOR CHILDRN) அமைப்பின் மூலம் குழந்தை கல்வி , குழந்தை காணாமல் போகுதல் , குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டுவருகின்றோம் .

இந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் PFC (PEACE FOR CHILDREN ) அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள் .

ஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல் , தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது . எங்கள் PFC அமைப்பு மகாராஷ்டிரா , புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது . மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம் .குழந்தைகள் பிரச்னை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை . அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் PFC அமைப்பையோ அல்லது எங்களது TOLL FREE எண்னை அழைத்து தகவலை பகிரலாம் .

நீங்கள் உங்கள் ஊரில் இது போன்று PFC அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் . அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம் .

Previous Post

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.‘ மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

Next Post

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

Next Post
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் " SK 16" படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.