• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை!

by admin
July 9, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை!
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை திரிஷா. அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளதால் கர்ஜனை எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது. இப்படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது,

“செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்கு கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தப்பிற்கு திரிஷாவின் காதலர் மேல் பழி வர அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் திரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின் கர்ஜித்து அவர் வில்லன் கூட்டத்தை பழிக்குப்பழி வாங்குவது தான் படத்தின் சாராம்சம். பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து வரும் திரிஷா என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் கதைதான். செய்யாத தவற்றால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குபழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்தே திரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். படமும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

Previous Post

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

Next Post

போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா !

Next Post
போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா !

போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா !

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.