• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்!

by admin
June 7, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்!
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும்   ,சென்னையைச் சுத்தமாக்கவும்  ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்தியது.
சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டது..
நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் ?
வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா? எதிர்காலத்  தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா?
 வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா?
ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா ?
நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த ‘இயற்கையோடு இணைவோம்’ இயக்கம்.
ஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுத்த செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக  பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்திருக்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெற்றார்கள் .
மாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்பப்பது. .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து “இயற்கையோடு இணைவோம்” என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்கச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமதி ஜெயஸ்ரீ – டெரஸ் கார்டனிங் ,  ஹரிஹரன் -ஸ்ரீ ஸ்வாமி ஆர்கானிக் பார்மிங் ,அருணா -வான் நிலா ஸ்கை ப்ரொடக்ஷன்ஸ், பிரசன்னா – பிரகிருதி பவுண்டேசன், திருமதி அருள்பிரியா – நம்ம பூமி பவுண்டேஷன், பூபேஷ் நாகராஜன் – இந்திரா ப்ராஜெக்ட்ஸ் , டாக்டர் அபிலாஷா – உளவியல் நிபுணர் , முருகேஷ் – லாலாஜி ஒமேகா இண்டர்நேஷனல் ஸ்கூல் ,திருமதி மாலதிகுருராஜன் -சமூக செயற்பாட்டாளர் , திருமதி லதா  – பிஎம் எஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், டாக்டர் ராஜலட்சுமி . சாதனா ஈவென்ட்ஸ் -நம்ம சென்னை, சரவணன் சந்திரன் – சமூக செயற்பாட்டாளர் ,ரகு-  ஆர்கானிக் பார்மிங், அருள்தாஸ் – சமூக செயற்பாட்டாளர், மற்றும்  நடிகர் நகுல் அவர் மனைவி ஸ்ருதி,ஆகியோர் நம்ம சென்னை  முயற்சிக்கு கைகொடுத்து ஊக்குவித்தனர்.
 அக்னி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அக்னீஸ்வர் ஜெயப்ரகாஷ்  இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து தன் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் சுற்றுச் சூழல் பணிகளில்  ஈடுபடுத்தி வருகிறார்.
Previous Post

Iswarya Menon latest photoshoot stills

Next Post

Game Over Press Meet Stills

Next Post
Game Over Press Meet Stills

Game Over Press Meet Stills

Popular News

  • கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.