• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோவை ராம் சரண் வெளியிட்டார்

by Tamil2daynews
August 20, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )  மியூசிக் வீடியோவை ராம் சரண் வெளியிட்டார்

 


நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில்,  சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )  மியூசிக் வீடியோவை, நவின் விஜய கிருஷ்ணா  இயக்கியுள்ளார். மியூசிக் வீடியோவை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார்.

ப்ரோ திரைப்படத்தின் அட்டகாச வெற்றிக்குப்  பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் மற்றொரு சுவாரஸ்யமான படைப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார்.  ஆனால் இந்த முறை ஒரு  அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார். சத்யாவின் ஆத்மா  ( Soul Of Satya )  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவை  சாய் தரம் தேஜின் உறவினரும் ஆர்ஆர்ஆர் திரைப்பட நட்சத்திர நடிகருமான ராம் சரண்  சமூக வலைதளங்களில் வழியே  வெளியிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மியூசிக் வீடியோ, நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க,  தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
மியூசிக் வீடியோ வெளியீட்டை அறிவித்த சாய் தரம் தேஜ் ட்வீட் செய்துள்ளதாவது, “, விதி அதன்  மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது!!! எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும்  எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய #TheSoulOfSatya உடைய பாடலை வெளியிடுகிறார். இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியற்கும் மற்றும் எங்கள்  மியூசிக் வீடியோவை  வெளியிட்டதற்கும் சரண் @AlwaysRamCharan நன்றி. @NawinVK நவீன் மற்றும் சத்யாவின் ஆத்மா படைப்பின் மொத்த குழுவிற்கும் இது மிகப்பெரும் பெருமை”

இந்த மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், ஸ்ருதி ரஞ்சனி பாடி இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் ரவி இப்பாடலை தமிழில் எழுதியுள்ளார்.. தில் ராஜு புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் கீழ் பாலகம் என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.

சாய் தரம் தேஜ் சமீபத்தில் ப்ரோ படம் மூலம் 100 கோடி கிளப்பில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார். அவரது மாமா பவன் கல்யாண் படத்தில் அவர் இணைந்து நடித்ததால் இது சாத்தியமானது என்கின்றனர் திரைப்பட ஆய்வாளர்கள்.

https://youtu.be/YtgZRtxLyDg

Previous Post

புலியும் பட்டாம்பூச்சியும்… வெளியானது புலிமடா திரைப்படத்தின் டீசர்!

Next Post

“ரங்கோலி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

"ரங்கோலி" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.