நடிகை ஜெயலலிதாவை சித்ரவதை செய்தவர் யார்..!
திரையில் நம்மளை ரசிக்க வைத்து விட்டு நடனமாடும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது படத்தில் அவரை பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியாது.
அப்படி ஒரு நடிகை வாழ்க்கையில் எப்படி கஷ்டப்பட்டார் என்பதே இந்த தொகுப்பு.
*சொத்துக்காக மட்டும் திருமணம்.. அஜித் பட நடிகையின் சோகம்!*
தமிழில் ‘பெரியமருது’, ‘அவள் வருவாளா’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஜெயலலிதா.

மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், இயக்குநர் வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், ஜெயலலிதா தனது கணவரிடமிருந்து கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும், பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
திருமணம் ஆன மறுநாளே அவரது உண்மை முகத்தை நான் பார்தேன்.
சொத்துக்காகவே என்னை மணந்தான்.

சித்திரவதை செய்ய ஆரம்பித்தான்.
ஆசிட் வீசிவிடுவேன் என தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.
இறுதியில் போலீசில் புகாரளித்து அவனை சிறையில் அடைத்தேன் என கூறி தனது வாழ்வின் துன்பகரமான பக்கங்களை பகிர்துள்ளார்.
பெரியமருது படத்தில் கவுண்டமணியுடனும், அவள் வருவாளா படத்தில் மலையாளப் பெண்ணாகவும் நடித்திருப்பார்.
அவரை விட்டு பிரிந்த பிறகு தான் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதாக அவர் கூறியது அனைவரையும் நிகழ்ச்சி ஆழ்த்தியது.