• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வலிமை” திரை விமர்சனம்…

by Tamil2daynews
February 25, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Valimai' movie review: The 'Amma' sentiment ruins this otherwise thrilling Ajith Kumar-starrer - The Hindu
இரண்டு வருட காலமாக தயாரிப்புகளில் இருந்த படம் “வலிமை” இப்ப வரும் அப்ப வருமமான்னு தல ரசிகர்களால்  ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் “வலிமை” கதையை பற்றி சொல்லணும்னா ரெண்டு பேர படத்தோட  சொல்லலாம். வால்டர் வெற்றிவேல், இன்னொன்னு மாநகரம், இந்த ரெண்டு படத்தோட அடித்தளம் தான் மொத்த கதையும்.சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று சமர்த்தான படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. முந்தைய படங்களில் ஒரு இயக்குநராக வலிமையாக வலம் வந்த வினோத் இம்முறை முழுமையான மசாலா மன்னனாக மாறி அஜித் ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
Valimai's official 'Glimpse' featuring 'Thala' Ajith promises a thrilling ride!
மசாலாப்படம் என்று வந்துவிட்ட பிறகு கதையில் லாஜிக் பார்ப்பது நீதி, நேர்மைகளுக்கு எதிரானது அல்லவா? கொலம்பியாவில் தயாரிக்கப்படும் ஆபத்தான போதைப் பொருட்கள் கடத்தல் ஆசாமிகளால் சென்னைக்கு சப்ளை செய்யப்பட்டு அதை பயன்படுத்தும் மாணவர்கள் சீரழிகிறார்கள். அதைக் கண்டு சென்னை கமிஷனர் மனம் புழுங்கி,’இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஒருத்தன் நிச்சயம் வருவான்’ என்று தவிக்க காவல் துறை உயர்பதவியில் இருக்கும் அஜித் மதுரையிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆகி வந்து, அந்த கும்பலைக் கொத்துக்க்றி போட்டு, கெட்டுப்போன இளைஞர்களைப் பெற்றோரோடு சேர்த்துவைக்கிறார். சுபம். இந்தக் கதையை என்ன காரணத்துக்காகவோ மூன்று மணி நேரத்துக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.இதற்குள் இந்த வகையான படங்களில் பார்த்துச் சலித்த தம்பி செண்டிமெண்ட் ட்விஸ்டுகள், க்ளைமேக்ஸில் ஹீரோவின் பெற்றோர் மற்றும் உற்றாரை வில்லன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற பல க்ளிஷேக்கள் உண்டு. ஆனால் படத்தில் இடம் பெறும் பைக் ரேஸ்கள் இதுவரை இந்திய சினிமா பார்த்திராதது என்று ‘தல’யில் அடித்து சத்தியம் செய்யலாம்.
Valimai Glimpse OUT: Ajith Kumar Steals The Show With his Action Avatar
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் செம கியூட்டாக இருக்கிறார் அஜித்.எப்போதும் போல் நடிப்புக்கு வேலை இல்லை. நாயகியான ஹிமா குரோஷி கூலிங் கிளாஸில் மனசைக் கொள்ளை கொல்கிறார். மும்பை வரை சென்று ஒரு லவ் லெட்டர் கொடுத்துவிட்டு வர மனசு துடியாய்த் துடிக்கிறது. இவர்களுக்கு காதல், டூயட் என்று எதுவும் வைக்காமல் காட்சிகளை வெகு சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார் வினோத். படத்தின் இன்னொரு நாயகனாக, அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பா நடிப்பிலும் தோற்றத்திலும் கவனம் ஈர்க்கிறார். வில்லன் கார்த்திகேயாவும் அஜித்துக்கு சரியான டஃப் கொடுக்கிறார்.
Ajith kumar valimai karnataka release by kamar film factory boney kapoor | Galatta
இரண்டே பாடல்களில் யுவன் முத்திரை பதிக்க, பின்னணி இசையில் ஜிப்ரான் பின்னி எடுக்கிறார்.உலகத்தரமான பைக் ரேஸ் காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், வழக்கமான மசாலாக் காட்சிகளைக் கூட தனது பிரமாதமான மேக்கிங்கில் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கும் ஹெச்.வினோத், இப்படத்தில் ஒரு இயக்குநராக கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.இத்தனை வருடங்கள் இடைவெளி விட்டு இந்த படத்தை இயக்கிய  ஹெச்.வினோத்திற்கு ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி உங்களுடைய கதைகளில் ரிசர்ச் பலபேருக்கு பிடிக்கும் .நீங்க இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த வலிமை வேற லெவல்…
Previous Post

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

Next Post

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிராஃபிக் நாவலின் அறிமுக பிரதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

Next Post

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிராஃபிக் நாவலின் அறிமுக பிரதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

Popular News

  • இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

    இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.