• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

by Tamil2daynews
February 24, 2022
in சினிமா செய்திகள்
0
திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார்.சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது.திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.
பவுடர் குழு
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி
இசை (கிளிம்ப்ஸ்) – லேயண்டர் லீ மார்ட்
ஒளிப்பதிவு – பிரஹத் முனியசாமி (கிளிம்ப்ஸ்) உதவி ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பு – குணா
கலை இயக்குநர் – சரவணா
சண்டைக்காட்சி – விஜய்
உடைகள் – வேலவன்
புகைப்படங்கள் – ராஜா
சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்
ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்
டிஐ வண்ணம்: வீரராகவன்
வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர் – சரவணன்
தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா
தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்
ஆடியோ லேபிள் – டிவோ
Previous Post

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பத்தில் கலக்கிய நக்ஷா சரண்..!

Next Post

“வலிமை” திரை விமர்சனம்…

Next Post

"வலிமை" திரை விமர்சனம்...

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.