வைரலான தனுஷின் வீடியோ..!
நெட்ஃபிளிக்ஸின் “தி கிரே மேன்” திரைப்பட முன்னோட்ட சந்திப்பில், தனுஷின் பதில்கள் வைரலாகி வருகிறது, மற்றும் படத்திலிருந்து தனுஷ் சம்பந்தமான ஒரு பிரத்யேக அதிரடி ஆக்சன் கிளிப் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
தி கிரே மேன்ஸ் LA பிரீமியரில் தனுஷின் டிரெண்டிங் வீடியோவை இங்கே பாருங்கள்: https://www.instagram.com/p/ Cf4Cc_ZAo5c/
இப்படத்தில் தனுஷின் அதிரடி ஆக்சன் காட்சியை இங்கே காண்க: https://www.instagram.com/tv/ Cf5Xc0Eg52f/?igshid= MDJmNzVkMjY%3D
நெட்ஃபிக்ஸ் இன்று “தி கிரே மேன்” படத்தில் நடிகர் தனுஷ் பங்க்கேற்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி துணுக்கை வெளியிட்டுள்ளது. இதில் கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), எனும், சியரா சிக்ஸ் மற்றும் ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) ஆகியோருடன் தனுஷ் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த உக்கிரமான சண்டைக் காட்சி ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. சூப்பர் ஸ்டார் தனுஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு கில்லிங்க் மிஷின், யாராலும் தடுக்க முடியாதவர் ஆனால் கொள்கையற்றவர் அல்ல. தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் “தீவிரமான சக்தி” என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தி கிரே மேன் பிரீமியரின் பத்திரிகையாளர் சந்திப்பில், தனுஷின் நகைச்சுவை உணர்வு அனைவரையும் அசத்தியது. இத்திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டபோது, தனுஷ் “நான் இந்த படத்தில் எப்படி நடித்தேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை”. மேலும் அவர், “நம்ப முடியாத அதிசயமாக இருந்தது, மிக உற்சாகமாக உணர்ந்தேன். நிச்சயமாக, படம் குறித்து நான் அதிகம் சொல்ல முடியாது. இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி, என்னால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது இம்மாதிரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன் என்றார்.
எதையும் சாதிக்கும் மனிதன், இதோ “தி கிரே மேன்” தனுஷ் உங்களுக்காக
“தி கிரே மேன்” பற்றி
இயக்குநர்கள்: ஆண்டனி ரூஷோ, ஜோ ரூஷோ
எழுத்தாளர்கள்: ஜோ ரூஷோ, கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி
தயாரிப்பாளர்கள்: ஜோ ரோத், ஜெஃப்ரி கிர்சென்பாம், ஆண்டனி ரூஷோ, ஜோ ரூஷோ, மைக் லரோக்கா, கிறிஸ் காஸ்டால்டி
நிர்வாக தயாரிப்பாளர்கள்: பேட்ரிக் நியூவால், கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி, ஜேக் ஆஸ்ட், ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட், ஜெஃப் ஹேலி, சாக் ரோத் மற்றும் பாலக் படேல்
மூல புத்தகத் தொடர் : மார்க் கிரேனியின் தி கிரே மேன்
நடிகர்கள்: ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மௌரா, தனுஷ், பில்லி பாப் தோர்ன்டன், ஆல்ஃப்ரே வுடார்ட், ரெஜி-ஜீன் பேஜ், ஜூலியா பட்டர்ஸ், எமி இக்வாகோர், ஸ்காட் ஹேஸ்
வெளியீட்டு தேதி | நெட்ஃபிக்ஸ் வெள்ளிக்கிழமை, ஜூலை 22
கதைச் சுருக்கம் | கிரே மேன் CIA ஆபரேட்டிவ் கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), சியாரா சிக்ஸ். ஃபெடரல் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரது கையாளுபவரான டொனால்ட் ஃபிட்ஸ்ராய் (பில்லி பாப் தோர்ன்டன்) என்பவரால் ஒரு வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார், ஜென்ட்ரி ஒரு காலத்தில் மிகவும் திறமையான, ஏஜென்சியில்-வேலை செய்த அதிரடி வீரர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது மற்றும் சிக்ஸ் சிஐஏவின் முன்னாள் கூட்டாளியான லாயிட் ஹேன்சன் (கிறிஸ் எவன்ஸ்) மூலம் உலகெங்கிலும் வேட்டையாடப்படுகிறார், அவர் அவரை கொல்லும் வரை ஓய மாட்டார். ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) அவரது முதுகெலும்பாக இருக்கிறார்.
ரியான் கோஸ்லிங் தான் தி கிரே மேன் மற்றும் கிறிஸ் எவன்ஸ் அவரது எதிரியாக நடிக்கிறார். நெட்ஃபிக்ஸ்/ஏஜிபிஓ-தயாரித்த திரில்லரில் ஆண்டனி மற்றும் ஜோ ரூஷோ இயக்கத்தில் அனா டி அர்மாஸ் நடித்துள்ளார், ரெஜே-ஜீன் பேஜ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக், தனுஷ், மோகன், வாக்னர் மற்றும் ஆல்ஃப்ரே வூட்டார்ட் இணைந்து நடித்துள்ளனர். மார்க் கிரேனியின் தி கிரே மேன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஜோ ரூஷோ, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். தயாரிப்பாளர்கள் ஜோ ரோத், ஜெஃப்ரி கிர்சென்பாம், ஜோ ரூஷோ, ஆண்டனி ரூஷோ, மைக் லரோக்கா மற்றும் கிறிஸ் காஸ்டால்டி. நிர்வாக தயாரிப்பாளர்கள் பேட்ரிக் நியூவால், கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி, ஜேக் ஆஸ்ட், ஏஞ்சலா ரூசோ-ஓட்ஸ்டாட், ஜெஃப் ஹேலி, சாக் ரோத் மற்றும் பாலக் படேல்.