• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

by Tamil2daynews
June 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

 

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நாயகனை மையமாகக் கொண்ட கதை, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது என வெவ்வேறு ஜானர்களில் நடிகராக தனது எல்லைகளை உடைத்துள்ளார்.

‘பேராண்மை’ போன்ற படங்களிலிருந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘தனி ஒருவன்’ வரை, ரவி மோகனின் திரைப்படப் பயணமும், பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்கும் துணிச்சலும் அவரை தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் பன்முகத் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘பென்ஸ்’ படத்தில் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர்.

LCU-வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ‘பென்ஸ்’ படத்தில் ரவி மோகன் இணைந்திருப்பது படம் மீது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரவி மோகன் படத்தில் இணைந்தது குறித்து, பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான மற்றும் பல்துறை திறன் கொண்ட நடிகர்களில் ரவி மோகனும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வித்தியாசமான திரைப்படங்கள், வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்கள் என இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர். திரையில் அவரின் ஆளுமை, நேர்மை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்துவதற்காக செலுத்தும் அர்ப்பணிப்பு என அவர் நடித்த ஒவ்வொரு படமும் தனித்துவமானது.

மேலும், வழக்கத்திற்கு மாறான திரைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என எந்த ஜானரிலும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வெகுசில நடிகர்களில் ரவி மோகனும்  ஒருவர். ‘பென்ஸ்’ திரைப்படத்தில் அவர் இணைந்திருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.  நிச்சயம் இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்”.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’, மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில், வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘பென்ஸ்’ திரைப்படமும் இணைந்துள்ளது.

ராகவா லாரன்ஸ், ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மல்டி ஸ்டாரர் படங்களின் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Previous Post

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

Next Post

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.