• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

by Tamil2daynews
June 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

 

எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பனி’ (Drama Company).

இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார்‌ மற்றும் இயக்குநராக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற பிளாக்பஸ்டர் வெற்றியையும், நடிகராக ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திறமையான இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகிய இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன்‌ இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை முன்னணி பிரமுகர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
டாக்டர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் மற்றும் ஷிவானி நாகாரம் ஆகியோருடன், ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் புகழ்பெற்ற யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இசை: லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு: பிரகதீஷ் பிரபு
படத்தொகுப்பு: சுரேஷ்
ஆடை வடிவமைப்பு: சுவாதி ராமகிருஷ்ணன்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த சுவாரசியமான அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

Previous Post

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

Next Post

“அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Next Post

“அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.