
ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் வரும் ஜெய்சங்கர் நிறைய படங்களில் நடித்திருப்பார் அந்த படங்களை பார்க்கும் நினைவுகள் இந்த படம் பார்க்கும்போது வந்தாலும் காட்சி அமைப்புகளிலும் கதையை நேர்க்கோட்டில் கொண்டு செல்வதிலும் மிக அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்

அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் முன்னொரு காலத்தில் தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக நினைத்ததை நிறைவேற்றும் பன்றியின் சிலை சீன தேசத்தில் இருந்து தமிழகம் வருகின்றது.பல கோடி மதிப்புள்ள அந்த ஆயிரம் ஆண்டு பழமையான பன்றியின் சிலையொன்றை ஒரு ரவுடிக் கும்பல், போலீஸ் அதிகாரிகள், சினிமா உதவி இயக்குநர் என பல்வேறு தரப்பினர் சிலையை தேடுகின்றார்கள் அந்த பன்றியின் சிலை யாருக்கு கிடைத்தது? என்ன ஆனது என்பதே கதை.