• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘என் நெஞ்சம் நீந்துதே’ வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
October 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘என் நெஞ்சம் நீந்துதே’ வெளியாகியுள்ளது!

 

‘ஆர்எக்ஸ் 100’ மற்றும் ‘மகா சமுத்திரம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரித்துள்ள இப்படத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். ‘கோ’ புகழ் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘என் நெஞ்சம் நீந்துதே’ இன்று வெளியாகியுள்ளது. இந்திய அளவில் ‘கந்தாரா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜனீஷ் லோக்நாத், ’செவ்வாய்கிழமை’ படத்திற்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார். பழனி பாரதி பாடல்களை எழுதியிருக்க, ஹர்ஷிகா தேவநாத் பாடியுள்ளார்.

அழகான கிராமப்புறத்தின் பின்னணியில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாயல் ராஜ்புத் மற்றும் அஜ்மல் அமீருடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிச்சயம் உங்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

’செவ்வாய்கிழமை’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ஹிட். அந்தப் பாடலின் மூலம் கிராமத்து மக்களிடையே உள்ள அச்ச உணர்வை இயக்குநர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் ஒரு கொலை நடப்பது பற்றிய சில குறிப்புகளையும் இந்தப் பாடல் தந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள இந்தப் பாடலில், பாயலின் கதாபாத்திரத்தின் மூலம் காதல் வெளிப்பட்டுள்ளது.
Imageதயாரிப்பாளர்கள் ஸ்வாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “அஜய் பூபதி வெறும் பாடல்களை மட்டும் தராமல் அதன் வழியே கதையும் சொல்வதால் அவை மிகவும் சிறப்பாக வெளிப்படும். ‘என் நெஞ்சம் நீந்துதே’ ஒரு குறிப்பிட்ட சூழல் கொண்ட காதல் பாடல். இந்தப் பாடல் வழியே பாயல் கதாபாத்திரத்தின் பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாடலைப் போலவே இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. டிரெய்லர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். படத்தை நவம்பர் 17ம் தேதி பெரிய அளவில் வெளியிடுவோம்” என்றனர்.

இந்தப் படம் ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லர் என்று இயக்குநர் அஜய் பூபதி கூறியுள்ளார். மேலும், “படம் பல உணர்வுகளைப் பற்றியது. அதில் காதலும் ஒன்று. அஜ்னீஷ் லோக்நாத் நல்ல இசையைக் கொடுத்துள்ளார். பாடல்களை அழகாகப் படமாக்கியுள்ளோம். தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்திற்கு ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் இணைத் தயாரிப்பு செய்துள்ளனர்.

நடிகர்கள்:
பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழுவினர்:

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: டாக் ஸ்கூப்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி,
எடிட்டர்: குல்லப்பள்ளி, மாதவ் குமார்,
வசனம்: தாஜுதீன் சையத், ராகவ்,
கலை இயக்குநர்: மோகன் தல்லூரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரகு குல்கர்னி,
ஃபைட் மாஸ்டர்கள்: ரியல் சதீஷ், பிருத்வி,
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: தேசிய விருது பெற்ற ராஜா கிருஷ்ணன்,
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா,
நடன இயக்குநர்: பானு,
ஆடை வடிவமைப்பாளர்: முடாசர் முகமது,
இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத்,
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.

Previous Post

ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா!

Next Post

இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு

Next Post

இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.