• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

by Tamil2daynews
May 24, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.Imageசென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K
கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ்
இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – A. குமரன்
படத்தொகுப்பு – லினு. M
சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது
புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன்
கலை இயக்கம் – A. பழனிவேல்
நடன அமைப்பு – கல்யாண்

Previous Post

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

Next Post

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.