• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by Tamil2daynews
May 24, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌

ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌

சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து வரும் போது.. சத்ய தேவ் தனது ஹெட் போனில் அமைதியாக இசையை கேட்டுக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறார்.
Imageஇயற்கை மற்றும் வனத்தின் சாராம்சம் நிறைந்த ப்ரீ லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னணியில் உள்ள புலி ஆகியவை.. ஆர்வத்தை தூண்டும் வகையில் இயற்கையின் நுட்பமான குறிப்புகளை பிரதிபலிக்கிறது.

இப்படத்தின் தலைப்பும், போஸ்டரும் சத்ய தேவின் திரை வாழ்க்கையில் மிகவும் தீவிரமான – அதிரடியான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் புதிய உருவாக்கம் என்பதால்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

சத்யதேவ் இந்த படத்தின் மூலம் முற்றிலும் புதிய தளத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார். தனது உடல் வலிமையையும், அதன் தோற்றத்தையும் அதிகரிக்கும் ஒரு முழுமையான அதிரடி ஆக்சன் களத்திற்குள் அவர் திட்டமிட்டு நுழைகிறார்.

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு .. சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழும் அதிக ஆபத்துக்கள் நிறைந்த விசயங்களுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வகையான சுற்றுச்சூழல் அதிரடி திரில்லராக தயாராகிறது.

தொழில்நுட்பக் குழு :
கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்:  உல்லாஸ் ஹைதுர்
படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி
ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் – தேவ் தீப் காந்திகுண்டு
இசை : சிஞ்சித் யெர்மில்லி
கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி.
நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம்.
தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி – ஜக்கிடி – சசிதர் ரெட்டி படமடி
இயக்கம் : அஜய்  நாக் வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்.
Previous Post

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

Next Post

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

Next Post

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.