• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியடிக் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

by Tamil2daynews
September 12, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியடிக் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம்  தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு  சுவாரஸ்யமான திரைக்கதையுடன்  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  மேலும்  இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன்  வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.  நடிகை சம்யுக்தா இப்படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகையான சம்யுக்தா  இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Imageசம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு, டெவில் படத்தில் சம்யுக்தா நடிக்கும்  நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் , சம்யுக்தா பாரம்பரிய தோற்றத்தில் இனிமையான புன்னகையுடன் காணப்படுகிறார். அவரது தெய்வீகமான லுக்  ரசிகர்களால் மலர்கள் கொண்டு பூஜித்து வழிபடுமளவு சிறப்பாக அமைந்துள்ளது.

நந்தமுரி கல்யாண் ராம், ‘டெவில்’ படத்தில் ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடிக்க இருக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிம்பிசாரா’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கல்யாண் ராம், இந்த ஆண்டு ‘டெவில்’ படத்தின் மூலம் அனைவரையும் கவரத் தயாராகி வருகிறார்.

தேவன்ஷ் நாமா வழங்கும் இத்திரைப்படத்தை, அபிஷேக் பிக்சர்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் நாமா  தயாரித்து இயக்குகிறார். டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஸ்ரீகாந்த் விசா வழங்கியுள்ளார். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படும்.

Previous Post

எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

Next Post

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

Next Post

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.