• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’!

by Tamil2daynews
December 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’!

 

இந்த படத்தில்  விஜய் விஷ்வா, நலீப் ஜியா ,  மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக  டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன்,சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல் ,கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி  ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும்  சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக  மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள்.இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள்.

என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள் அவள்.ஆனால் யாரும் வரவில்லை.
அனைவரும் தயங்கி நிற்கிறார்கள்.

இது நாயகனுக்குத் தெரிகிறது அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை  அடித்து துவம்சம் செய்கிறான்.அடி வாங்கிய அவர்களோ பதில் விளைவு காட்டாமல் சிரிக்கிறார்கள்.நாயகன் புரியாமல் நிற்கிறான்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த, துரத்தப்பட்ட இளம் பெண்ணும் சிரிக்கிறாள்.காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன்,இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை  ஓங்கி அறைந்து விடுகிறான்.இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வெளிப்படையான குணம் கொண்ட நாயகன்  மீது காதலில் விழுகிறாள்.அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட… அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் ‘ கும்பாரி’ படத்தின் கதை.

படம் பற்றித் தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது,”இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை.சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை ‘போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம்.. காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும்  கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி உள்ளது என்கிறார்.

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.

இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.

நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது.

குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன.இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.

‘ கும்பாரி’ படத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது இவர்களின் திட்டமிடுதலுக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. கும்பாரி’ படத்தை ராயல் என்டர்பிரைசஸ்  சார்பில்  குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

‘கும்பாரி ‘திரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

Previous Post

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் வழங்கும், அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கத்தில், ‘ஜீவி’ வெற்றி- கிஷன் தாஸ் நடித்துள்ள படம் ‘ஈரப்பதம் காற்று மழை’!

Next Post

பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள். கபீர் சிங்கிலிருந்து பிரபாஸின் ‘ஸ்பிரிட்’, ‘அனிமல் பார்க்’ மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என அற்புதமான வரிசையுடன் ஒரு வளமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Next Post

பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள். கபீர் சிங்கிலிருந்து பிரபாஸின் 'ஸ்பிரிட்', 'அனிமல் பார்க்' மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என அற்புதமான வரிசையுடன் ஒரு வளமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.