• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

குமாரசம்பவம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 12, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குமாரசம்பவம் –  விமர்சனம்

 

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன் நாயகனாக அறிமுகமாக இருக்கும்  படம் ‘குமார சம்பவம்’ . குமரன் தங்கராஜன், துணை வேடங்களில் பாயல் ராதாகிருஷ்ண ஷெனாய், ஜி.எம். குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராஜாமணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன் தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு ஒவ்வாமை உருவாகிறது. குமரனின் தாத்தா வரதராஜன் மீது அதிக நெருக்கம் காட்டும் காரணத்தினால அவரை சகித்துக் கொள்கிறார்.  பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி எதுவுமே கைகூடாததால் தனது படத்தை தானே தயாரிக்க முடிவு செய்கிறார்.  இதற்காக தனது தாத்தாவிடம் வீட்டை  விற்க சொல்கிறார். இப்படியான நேரத்தில் தான் வரதராஜன் மர்மமான முறை கொலை செய்யப்படுகிறார். குமரன் வீட்டை விற்று தனது படத்தை இயக்கினாரா? வரதனை கொன்றது யார் என காவல் துறை விசாரணையின் வழியாக சொல்லப்படுகிறது குமார சம்பவம் படத்தின் கதை.
Kumaara Sambavam is a package in itself: Balaji Venugopal
விறுவிறுப்பும் காமெடி மற்றும் லைட்டாக ஒரு மெசேஜ் என வழக்கமான ஒரு டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம். இந்த வழக்கமான கதையை கிரேஸி மோகன் பாணியிலான ட்விஸ்டட் நகைச்சுவையால் சுவாரஸ்யமாக வைத்துக் கொள்கிறார் இயக்குநர் . வழக்கமாக சென்றுகொண்டிருக்கும் காட்சியில் திடீரென்று ஒரு கேரக்டர் சொல்லும் வசனம்  ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என மட்டுமில்லாமல் படத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் ஒரே சிங்கில் இருப்பது போல எதிர்பார்க்காத நேரத்தில் காமெடி துணுக்குகளை அவிழ்த்து விடுகிறார்கள். இதில் சில காமெடிகளை அது முடிந்தபின்பே நாம் கவனித்து சிரிக்கிறோம். முதல் பாதியில் கதைக்களம் மற்றும் அதிலுள்ள கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக ஒப்பன் செய்கிறார்கள். இரண்டாம் பாதியில் அனைவரையும் வைத்து ஒரு காமெடி டிராமாவை கட்டமைத்திருக்கிறார்கள். சம்பிரதாயத்திற்கு ஒரு லவ் சாங் வைத்திருந்தாலும்  இறந்த பாட்டியின் ஃபோட்டோவை வைத்து உருவாக்கப்பட்டிருந்த பாடல் நல்ல முயற்சி.
குமரன் இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் அதே நேரம் ஹீரோ இமேஜையும் பேலன்ஸ் செய்திருந்த விதம் சிறப்பு. ஜி.எம்.குமார் இளங்கோ குமரவேல் எப்போதும் போல் தேந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். பால சரவணன் , வினோத் சாகர் கவனமீர்க்கிறார்கள். கதையின் தன்மையை மீறாத பின்னணி இசையை வழங்கியுள்ளார் ராஜாமணி. வரதாவை கொன்றது யார் என்பது இறுதியில் ரிவீல் செய்யப்படுகிறது. இந்த அளவிற்கு ஹ்யூமராக கொண்டு போகிறார்கள் என்றால் வழக்கமான
காட்சிகள் மட்டுமே சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றனர்.
விடாமுயற்சி நிச்சயம் வெற்றி தான் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில் இந்த குமாரசம்பவம் ரசிகர்களுக்கு தரமான சம்பவம்.
Previous Post

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு

Next Post

பிளாக்மெயில் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

பிளாக்மெயில் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.