• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்பு.

by Tamil2daynews
February 1, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்பு.

 

அமெரிக்கர் அல்லாத, வெளிநாட்டில் வசிக்கும் ஒளிப்பதிவாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்றாகும். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒரு ஒளிப்பதிவாளரின் படங்களை பார்த்து அந்த ஒளிப்பதிவின் தரத்தை சோதித்து அதைப்பற்றி ஆலோசித்து அதற்குப் பிறகு தான் கூட்டாக இந்த அங்கீகாரத்தை வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய பெருமைகளை ஏற்கனவே பெற்றுள்ள ரவிவர்மன், பெரிதும் மதிக்கப்படும் ஏ எஸ் சி உறுப்பினராக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரவிவர்மன், “ஏ எஸ் சி என்று அழைக்கப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டதற்காக அதன் தலைமை மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்கும் இருக்கின்ற ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் இணைவதைக் கனவாக கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இயங்கும் தளத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது,” என்றார்.

கடந்த 25 ஆண்டுகளில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் சிறந்த ஒளிப்பதிவை ரவிவர்மன் வழங்கி இருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்கள் அனைவரோடும் அவர் பணி புரிந்திருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘தசாவதாரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பர்பி’, ‘சஞ்சு’, போன்ற பல படங்களுக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரவிவர்மன். இதற்கு முன்னர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தச் சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

Previous Post

இந்த காதலர் தினத்தன்று, *ஆஹா தமிழ்* அதன் புதிய வெப் சீரிஸ் *”மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”* மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.

Next Post

‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்

Next Post

'டாக்டர் அம்பேத்கர்' படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்

Popular News

  • செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

    0 shares
    Share 0 Tweet 0
  • தாவூத் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

December 7, 2025

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!

December 7, 2025

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!

December 7, 2025

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

December 7, 2025

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!

December 7, 2025

தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!

December 6, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.