‘கரு மேகங்கள் கலைகின்றன’ – விமர்சனம்.
அவரின் அடுத்த படைப்புதான் இந்த கருமேகங்கள் கலைகின்றன.
அன்பும், பிராயசித்தமும். சிறந்த படங்களை மட்டுமே சினிமாவாக தருவேன் என உறுதியுடன் இருக்கும் தங்கர்பச்சான் 10 ஆண்டுகளுக்கு பின் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கிஉள்ளார்.
இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை? தீர்வு என்ன? என்ற விஷயங்களை கதா பாத்திரங்களின் அற்புதமான உணர்ச்சிகளின் வழியே சொல்லியிரு க்கிறார் டைரக்டர். இரண்டு தனிப்பட்ட மனிதர்கள், இவர்கள் சந்திக்கும் மனிதர்கள் வழியே கதை நகர்கிறது.மிக எளிமையான உரையாடல்களும், வசன உச்சரிப்பும் படத்திற்கு கூடுதல் பலம். கருமேகங்கள் கூடி மழை வருமென்று எதிர் பார்த்திருப்போம். ஆனால் தீடீரென மேகங்கள் கலைந்து மழை வராமல் போய் விடும். அதே போல் அன்புக்கு ஏங்கி கிடைக்காமல் போய் விடும் உணர்வை சொல்லி உள்ளார் தங்கர்.
தகவல் தொழில் நுட்பத்தால் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களை முன் வைத்துள்ளார் தங்கர். தன் தவறுக்கு மன்னிப்பு கிடைக்குமா? தன் வீட்டில் தன்னை புரிந்து கொள்வார்களா என்ற அன்புக்கு ஏங்கும் முதியவர் நடிப்பில் நம் வீட்டு அப்பவை, தாத்தாவை நினைவு படுத்தி விடுகிறார் பாரதி ராஜா. யோகிபாபு தான் ஒரு சிறந்த குணாச்சித்திர நடிகர் என்பதை வரும் காட்சிகள் மூலம் உணர்த்துகிறார்.
அதிதி பாலன், கெளதம் மேனன், மருமகளாக நடிப்பவர் என அனைவருமே நடிப்பால் அசத்தி விடுகிறார்கள். ஜி. வி. பிரகாஷின் இசை தாலாட்டி செல்கிறது. ஏகாம்பரம் -தங்கரின் ஒளிப்பதிவில் லெனினின் படத்தொகுப்பு கைகோர்த்து படத்தை தரமான படமாக உயர்த்தி உள்ளது. கார்ப்பரேட் உலகில் குறைந்து வரும் பரஸ்பர அன்பின் முக்கியத்துவத்தை சொல்கிறது. கருமேகங்கள் கலைகின்றன.