• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மதராஸி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 6, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மதராஸி – விமர்சனம்

 

ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வந்திருக்கும் பிரம்மாண்டமான படம் தான் மதராஸி..

தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வைத்து வன்முறையை ஏற்படுத்த வட மாநிலங்களில் இருந்து வில்லன் கும்பல் ஐந்து கன்டெய்னர்களுடன் (Container) வருகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த அரசாங்கத்தின் NIA-வை சேர்ந்த பிஜு மேனன், விக்ராந்த் மற்றும் அவர்களின் குழு களமிறங்க, இதில் ஒரே ஒரு கன்டெய்னரை மட்டுமே NIA தடுத்து நிறுத்த மற்ற நான்கு கன்டெய்னர்களும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. இந்த மோதலில் பிஜு மேனனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஒரு பக்கம் வில்லனுக்கும் – NIA-வுக்கும் மோதல் ஏற்பட்டு கொண்டிருக்க, மறுபக்கம் காதல் தோல்வியால் மனம் வாடி நிற்கும் சிவகார்த்திகேயன் (ரகு) சலம்பல பாடலுடன் என்ட்ரி கொடுக்கிறார். கதாநாயகி ருக்மிணி  (மாலதி) தன்னை காதலித்துவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முயற்சி ஈடுபட்டு, பாலத்தில் இருந்து கீழே விழுந்து கை கால்களில் சிவகார்த்திகேயனுக்கு அடிபடுகிறது.

பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் சிவாவும் அனுமதிக்கப்பட, இருவருக்கும் இடையே சந்திப்பு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அந்த நான்கு கண்டைனர்கள் ஒரு Gas Factory-ல் இருப்பதை பிஜு மேனன் கண்டுபிடிக்கிறார். அந்த Factory-யை எப்படியாவது வெடிக்க வைத்து விட்டால், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என திட்டம்போட்டு, உள்ளே ஒருவனை அனுப்பி வெடிக்க வெக்க முடிவு செய்கிறார்.
சிவகார்த்திகேயன் எப்படியாவது சாக வேண்டும் என முயற்சி செய்வதை அறியும் பிஜு மேனன், தனது திட்டத்திற்காக சிவகார்த்திகேயனை பயன்படுத்துகிறார். Factory-க்குள் சிவகார்த்திகேயன் செல்ல, இவரை தேடி ருக்மிணி திரும்ப வந்துவிடுகிறார். இதன்பின் என்ன ஆனது? சிவகார்த்திகேயனின் பின்னணி என்ன? ருக்மிணி ஏன் சிவகார்த்திகேயனை விட்டு பிரிந்து சென்றார்? கன்டெய்னர்கள் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பு. ஆனால், திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம் என தோன்றுகிறது. காதல் காட்சிகள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சிவகார்த்திகேயன் – ருக்மிணி இருவரும் தங்களது காதலை உணரும் தரும், அதை அழகாக திரையில் காட்டியது எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

தனது மொத்த குடும்ப உறவையும் கதாநாயகி மாலதியிடம் ரகு பார்க்கிறான், அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த எல்லைக்கும் போவான் என காட்டியது சிறப்பு. ஆனால், அதில் சுவாரஸ்யமும் மிகமிக குறைவு. சண்டை காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். சரி, கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்றால், சண்டை காட்சிகளில் ஏகப்பட்ட கட்ஸ். அது எதற்கு என்று சுத்தமாக புரியவில்லை. கடுப்புதான் வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் என்றால் அறிவை வைத்து திரைக்கதையில் விளையாடி, ஒவ்வொரு காட்சிகளிலும் பல சர்ப்ரைஸை ஒளித்து வைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். அதை நாம் துப்பாக்கி, கஜினி, கத்தி, ரமணா போன்ற படங்களில் பார்த்திருப்போம். ஆனால் மதராஸி படத்தில் ஓரிரு காட்சிகள் மட்டுமே அப்படி உள்ளது. அது இப்படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது.

சண்டை காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்துள்ள Effort-க்கு தனி பாராட்டு. ஒரு பக்கம் சிவகார்த்திகேயன், மறுபக்கம் வித்யுத் ஜாம்வால் என இரு ஆக்ஷன் ஹீரோக்களை வைத்துக் கொண்டு தரமான சண்டை காட்சிகளை ஸ்டேஜின் செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, இருவரும் ஓயாமல் அடித்துக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை பார்க்கும் நாம் ‘அட்ரா அவன’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இங்கு எப்படா சண்டைய முடிப்பீங்க என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அதில் அடங்கும்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். நடிப்பில் அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், அவருடைய நடிப்பு நம்முடன் கனெக்ட் ஆனதா என்றால் அது கேள்விக்குறிதான். கதாநாயகி ருக்மிணி வசந்த் கதாபாத்திரத்தை வலுவாக வடிவமைத்துள்ளார் முருகதாஸ். அதை ருக்மிணி ஏற்று நடித்தது சிறப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

வில்லன் வித்யுத் ஜாம்வால் என்றாலும், துணை வில்லனாக வந்த நடிகர் ஷபீர் ஸ்கோர் செய்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் வித்யுத் மிரட்டினாலும், ஷபீரின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த ரோலில் சிறப்பாக நடித்துள்ளனர்.

மதராஸி திரை விமர்சனம் | Madharaasi Movie Review

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஒர்க்கவுட் ஆகவில்லை. எப்போதுமே இவருடைய பின்னணி இசை கதாபாத்திரங்களுக்கு தனி எலிவேஷன் கொடுக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை. அதுவும் இப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அதை சுதீப் சிறப்பாக செய்துள்ளார். எடிட்டிங் இன்னும் கூட வலுவாக இருந்திருக்கலாம்.

ஒட்டுமொத்த படத்திலும் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வந்து மறந்தது போல் தெரிகிறது.

மொத்தத்தில் இந்த மதராஸி நண்பனுக்கு நண்பன், வில்லனுக்கு வில்லன்.
Previous Post

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!

Next Post

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

Next Post

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

Popular News

  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.