பூனாவில் உள்ள இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம்.உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தலைமைச் செயல் அதிகாரி டெக்னாலஜி &சந்தீப் அம்பரே பேசும் போது ஆட்டோமொபைல் மற்றும் இயந்திர பொறியியல் துறை சார்ந்த வாகன உற்பத்தி துறை, தற்போது சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் உள்ளடங்கிய துறையாக முன்னேற்றம் அடைந்துள்ளது.இதில் பெரும்பாலான பொறியியல் துறை மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
எஸ்.ஆர்.எம் பதிவாளர் எஸ்.பொன்னுசாமி பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களின் புதுமைச் சிந்தனை மற்றும் திறன்களை மேம்படுத்தி புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க பேருதவி புரியும் என்றார்.