• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பேப்பர் ராக்கெட்” வெற்றியைப் பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்*

by Tamil2daynews
August 31, 2022
in சினிமா செய்திகள்
0
டைரி – விமர்சனம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“பேப்பர் ராக்கெட்”  வெற்றியைப் பற்றி  இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

 

சமீப காலத்தில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வெப் தொடர், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள “பேப்பர் ராக்கெட்”. இந்த ஹிட் தொடருக்கு, தனது இசையால் மெருகூட்டியுள்ள  இசையமைப்பாளர் சைமன் கே.கிங், தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளார்.

தான் இசையமைத்த “சத்யா” திரைப்படத்தின் “யவ்வனா” என்ற சூப்பர்ஹிட் பாடல் வெளியான உடனேயே தன்னை அணுகிய முதல் இயக்குனர் கிருத்திகா உதயநிதி தான் என்றும், அடுத்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியது தான், இந்த அருமையான பயணத்தின் ஆரம்பம் என்றும் கூறுகிறார், சைமன்.

“பேப்பர் ராக்கெட் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மட்டுமல்லாமல் பரவலான பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. ரம்யா நம்பீசன் பாடிய “சேரநாடு” என்ற தமிழ்-மலையாளம் இருமொழிப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சமீப காலங்களில் வெளியாகும் திரைப்படங்களின் கதைகளில் முன்பு போல் பாடல்களுக்கு முக்கிய பங்கு இல்லை என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால், இயக்குனர் கிருத்திகா எப்போதுமே தனது கதைகளில்  பாடல்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனாலேயே பேப்பர் ராக்கெட்டில் அற்புதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன” என்று சைமன் கே.கிங் கூறுகிறார்.

“மிகவும் திறமையான இசையமைப்பாளர்களான தரன் மற்றும் வேத் ஷங்கர் ஆகியோருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம். இந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் கிருத்திகாவுக்கு நன்றி” என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சைமன் கே.கிங்.

அடுத்ததாக,  வெற்றிகரமான இயக்குனர் இணையான புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில்,  அமேசான் ஒரிஜினலுக்காக  “வதந்தி” என்ற   மர்ம திரில்லரை நமக்கு வழங்குவதற்காக, சைமன் கே.கிங். மீண்டும் “கொலைகாரன்” படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார். S.J.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


”கொலைகாரன்” & “கபடதாரி” போன்ற புயலான த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, “பேப்பர் ராக்கெட்” ஒரு தென்றலாக வீசுவது ஒரு இனிமையான அனுபவம் என்று சிரிக்கிறார், இசையமைப்பாளர் சைமன் கே.கிங்.
Previous Post

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்!

Next Post

‘மேதகு-2’ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..

Next Post
டைரி – விமர்சனம்

'மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது..

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.