• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் ‘ஜீனி ’ ஃபர்ஸ்ட் லுக் வசீகரிக்கும் காட்சிகளோடு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது!

by Tamil2daynews
March 27, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜெயம் ரவியின் ‘ஜீனி ’ ஃபர்ஸ்ட் லுக் வசீகரிக்கும் காட்சிகளோடு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது!

 

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் மகிழ்விக்கும்படியான படைப்புகளை எப்போதும் கொடுத்து வருகிறார். இப்போது, அவர் ‘ ஜீனி ‘ மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்க இருப்பதை உறுதியளித்துள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வை இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் Jr., “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார்.Image

படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது, “குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜெனி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிகிறது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.

மேலும், ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம் என்பதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி மற்றும் வாமிகா கபி அனைவரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பாடல்கள் மற்றும் இசை அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர். தி புரொடக்ஷன் ஹவுஸ் இந்த படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரிப்பில் இயக்குநர் அர்ஜுனன் Jr. படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். லெஜெண்டரி ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்க, பிரதீப் இ ராகவ் திறமையாக படத்தை எடிட் செய்துள்ளார். யானிக் பென் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி அசத்தலாக செய்திருக்கிறார்.

Previous Post

Gleneagles Healthcare India unveils new name and identity to advance clinical excellence and patient care

Next Post

நடிகர் சூர்யா ‘ஆடுஜீவிதம்’ படத்திற்குப் பாராட்டு: 14 ஆண்டுகால பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் உருவாகி இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனின் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’!

Next Post

நடிகர் சூர்யா ‘ஆடுஜீவிதம்’ படத்திற்குப் பாராட்டு: 14 ஆண்டுகால பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் உருவாகி இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனின் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’!

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.