கிக் – விமர்சனம்
டி டி ரிட்டர்ன்ஸ் என்கிற மாபெரும் வெற்றிப்படம் கொடுத்த சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கிக்.
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தான்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம்தான் கிக்
.விளம்பரப் படம் எடுக்கும் போட்டி கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள் மனோபாலாவும் தம்பி ராமையாவும். மனோபாலாவுக்காக நடிகை தான்யா ஹோப் (ஷிவானி) பணிபுரிகிறார். தம்பி ராமையாவுக்காக நடிகர் சந்தானம் (சந்தோஷ்) பணிபுரிகிறார்.
இந்தப் புகார்களில் சிக்காமல் கோல்மால் செய்து ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகும் சந்தானம், தான்யாவுடம் வேறொரு பெயரில் பழகி, தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார். தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில் தான்யா தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன, தொழில் போட்டிகளுக்கு இடையே இவர்களது காதல் என்ன ஆனது என்பதே மீதி கதை
கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜூம் படத்தை தமிழில் கிக்காக ரீமேக் செய்திருக்கிறார்கள். டிடி ரிட்டர்ன்ஸ் மூலம் கடந்த மாதம் அசத்தலான வெற்றி தந்த சந்தானம் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றமே.
காமெடி ப்ளாட்டை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், செந்தில், வையாபுரி என எண்ணிக்கையிலடங்காத காமெடி நட்சத்திரப் பட்டாளம். ஆனால் பாதி பேர் காமெடி எனும் பெயரில் வெறுப்பேற்றுகிறார்கள். தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் பாதி நேரம் எரிச்சலூட்டவும் ஆபாச ஜோக்குகளை அள்ளித் தெளிக்கவுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
காமெடி கதைக்களம், பொய்களை அடிப்படையாக வைத்து காலம் கழிக்கும் நாயகன் என கதை அமைத்ததுடன் அதையே சாக்காக வைத்து அத்தனை லாஜிக் மீறல்கள்! அதற்கு மேல் திரைக்கதை இந்தியா, பாங்காக் என தேமேவென்று தன்பாட்டுக்கு பயணிக்கிறது. முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காமெடிகளையும் படம் முழுவதும் தூவிக் கொண்டே இருக்கிறார்கள்.
“டிடி ரிட்டர்ன்ஸ் உடன் இந்தப் படத்தை ஒப்பிட வேண்டாம் , கிக் வேற மாதிரி இருக்கும், இதை சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றுதான் சொல்ல வேண்டும்” எனக் கூறி ஏற்கெனவே சந்தானம் விமர்சனங்களில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்!
படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சத்தம் போட்டு கத்தி கொண்டு இருக்க அதிலும் தம்பி ராமையா வா அதில் நம்பர் ஒன் ரகம் படம் பார்க்கும் அனைவரும் படத்தை முறைத்துக் கொண்டிருப்பது தான் படத்தோட கிக்கே.
ஒரு வெற்றி படத்தை கொடுத்தால் ஒன்பது தோல்வி படங்களை கொடுக்கணும் என்கிறது சந்தானத்தின் ஜாதகம்.
அது இந்த ‘கிக்’ படத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது