• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ !!

by Tamil2daynews
February 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’   !!

 

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அடுத்த திரைப்படத்தினை, ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும், இணைந்து தயாரிக்கவுள்ளதை, பெருமையுடன் அறிவித்துள்ளது. டி கம்பெனி நிறுவனம் இப்படத்தினை இணைத்தயாரிப்பு செய்கிறது.  நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, கதை நாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டி கம்பெனி நிறுவனத்தின் திரு. கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. அமேசான் பிரைமில் மிகவும் பிரபலமான மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் சீரிஸுக்காக ‘காதல் என்பது கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி’ எபிஸோடை இயக்கிய, முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திரக் கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நடிகர் ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ருத்ரா முன்னதாக விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாக பணிகளிலும், கிரியேட்டிவ் டீமிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு ஒரு நடிகராகத் தனது திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக்  கூர்மைப்படுத்திக்கொண்டு, இப்போது  நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட்  நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக இப்படம் மூலம் தமிழ்த்துறையில் கால்பதிக்கிறார். நெட்ஃபிக்ஸ் சீரிஸான லிட்டில் திங்ஸ் மற்றும் கர்வான் மற்றும் திரிபங்கா போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்  மிதிலா என்பது குறிப்பிடத்தக்கது.
எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் முதல் நீ முடிவும் நீ ஆகிய படங்களில் அற்புதமான  இசையைத் தந்த தர்புகா சிவா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்திற்கு இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடா முதல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ் R படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் கோலாகலமாகத் துவங்கியது. படக்குழு அடுத்த இரண்டு வாரங்கள், தொடர்ச்சியாக முதல் ஷெட்யூலுக்கான படப்பிடிப்பை நடத்தவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, கோவா மற்றும் இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்

Next Post

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

Next Post

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

October 10, 2026
ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

October 10, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

October 10, 2026

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

October 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.