• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

by Tamil2daynews
February 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்  உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

 

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘லெவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில்  உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக  நடித்திருக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’   மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘லெவன்’ படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இப்படத்தின் முதல் பார்வையை நேற்று 11 நட்சத்திரங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் மக்களிடம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.
Previous Post

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ !!

Next Post

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Next Post

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Popular News

  • ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

July 9, 2025

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

July 9, 2025

பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா

July 9, 2025

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

July 9, 2025

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

July 9, 2025

’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

July 9, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.