இவ்விழாவினில்..
இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில் நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
சத்ய ஜோதி தியாகராஜன் சாருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் சம்பாதிப்பதை, படத்திலேயே செலவு செய்கிறார். அவருக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும். தனுஷ் அறிமுகத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது வளர்ச்சி மிகப்பெரியது. அவர் ஹாலிவுட் அவார்டை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். கேப்டன் மில்லர் 100 நாள் விழா கொண்டாட வேண்டும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.
இந்தப்படத்தில் வில்லன் நான். எல்லாப்படத்தையும் போல, ஹீரோவுடன் சண்டை போட்டுள்ளேன். தனுஷுக்கு நானும் தீவிர ஃபேன். இந்தப்படம் செம்மையான அனுபவமாக இருந்தது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.
தனுஷ் சாருடன் எனக்கு 7 வது படம். மிகப்பெரிய ஜர்னி. கேப்டன் மில்லர் எனக்கு லைஃப் டைம் படம். இதில் சிஜுயெல்லாம் இல்லை, லைவ்வாக நிறைய எடுத்திருக்கிறோம். அருணும் நானும் காலேஜுல் இருந்தே ஃபிரண்ட்ஸ். இதில் நிறைய புதுசாக பண்ணியிருக்கிறோம். தனுஷ் சார் தண்ணீர் மாதிரி. எதில் வைத்தாலும், அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். இந்தப்படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதற்காக ஸாரி. சிவாண்ணாவுடன் ரொம்ப நாளாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஆக்சன் காட்சி இருந்தது, டூப் போடாமல் எடுத்திருக்கிறோம். எல்லோரும் பயங்கரமாக கஷ்டப்பட்டு உழைத்தனர். இப்படம் பொங்கலுக்கு விருந்தாக இருக்கும்.
தனுஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக ஒரு விருந்தாக இருக்கும். நன்றி.
இப்படத்திற்காக 1500 துப்பாக்கிகள் செய்தோம். இந்தப்படம் நிறைய வேலை வாங்கியது. அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டு வருவது பெரிய சவால், ஒரு கற்கோயிலைக் கொண்டு வருவது பயங்கர சவாலாக இருந்தது. படம் பார்க்கும் போது எது செட் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படத்திற்காக என்னுடன் உழைத்த தொழிலாளிகள் அனைவருக்கும் நன்றி. சத்யஜோதி பிலிம்ஸ் புரொடக்சன் தரப்பில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். அவர்களால் தான் இவ்வளவு பெரிய படம் சாத்தியமானது. தனுஷ் சாருடன் இரண்டாவது படம். கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பாடலில் வரும் படத்தை, நான் தான் வரைந்தேன். நான் தீவிரமான தலைவர் ஃபேன், அவரை நினைத்துத்தான் வரைந்தேன். தலைவருக்குப் பின் ஒரு நடிகராக தனுஷ் சாரை ரசிக்கிறேன். ரஜினி சாருக்குப் பிறகு அவர் தான். என் கல்லூரிக்கால நண்பர் அருண், அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். எனக்கு இப்படத்தில் முழுச்சுதந்திரம் தந்தார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.
இது மிகப்பெரிய படம். தனுஷ் சாருடன் இரண்டு தம்பிகள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பார்த்தால் மகன்கள் மாதிரி தெரியவில்லை. அவர்களும் விரைவில் ஹீரோவாக வர வேண்டும். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அருண் மற்றும் இந்த டீமை நம்பி, மிகப்பெரிய படைப்பைத் தந்திருக்கிறார்கள். விஷுவல்கள் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.
கேப்டன் மில்லர் நான் தனுஷ் சாருக்கு எழுதியிருக்கும் ரெண்டாவது பாடல். பட்டாஸ் படத்தில் புது சூரியன் பாடல் எழுதினேன், அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். இரண்டு பாடலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தந்த வாய்ப்பு. இப்படத்தில் கோரனாரு என்ற பாடல் எழுதியிருக்கிறேன். கோரனாரு என்றால் யானை பலம் கொண்டவர் என்று அர்த்தம். இந்தப் பாடலுக்காக ஜீவி சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது..
கேப்டன் மில்லர், புது வருடத்தில் முதல் ஈவண்ட், மகிழ்ச்சி. தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக இப்படம் இருக்கும். எல்லோரும் அவ்வளவு பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். சில படங்கள் செய்யும் போது தான் நாம் பெரிய, முக்கியமான படத்தில் வேலை செய்வதாகத் தோன்றும். இந்தப்படம் அந்த மாதிரியான படம். தனுஷ் சாருடன் பொல்லாதவனில் ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார். ஆனால் ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் எல்லாம் செய்தவுடன், நிறைய விருதுகள் வாங்கி, கலக்கி விட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது…
T.G.தியாகராஜன் சாருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும், அந்தக்கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி. ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம், அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன், அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க வந்தார். அவர் ஒரு ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும், நன்றி.நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,
T.G.தியாகராஜன் சார், அர்ஜூன் எல்லோருக்கும் நன்றி. அருண் வந்து கதை சொன்ன போதே, தனுஷ் சார் நடிக்கிறாரா? நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அவரை முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். சிம்பிள், சூப்பர் ஆக்டர் என்றால் அவர்தான். எப்போதும் அவர் படங்கள் நிறைய முறைப் பார்ப்பேன். இந்தபபட ஷீட்டிங் செம்ம ஜாலியாக இருந்தது. அவருக்காக எப்போதும், நான் நடிக்க தயார். இந்தியாவில் மட்டும் இல்லை, உலக அளவில் சிறந்த ஆக்டர் தனுஷ். இப்படத்தில் சந்தீப், பிரியங்கா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஜீவி பிரகாஷ் சூப்பராக மியூசிக் செய்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.
சிறு துளி பெரு வெள்ளம், 2002 லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால் தான் நான். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது. அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார், இது எல்லாம் பண்ண முடியுமா ? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன், ம்ம்… பண்ணலாம் சார் என்றார். இப்போது படம் பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார். பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார், ஜீவி ஐ லவ் யூ. சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப்பெரிய ஆதரவு தந்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப்பெரிது. கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்காக இங்கு வந்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.இப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.