• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வார்னர் மியூசிக் இந்தியா (Warner Music India) நிறுவனம், அமேசான் ஒரிஜினல் (Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்களை வெளியிட்டுள்ளது !

by Tamil2daynews
January 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Jackpot scored by Boom Boom cowboy through social website: Congratulations to GV Prakash! » Jsnewstimesஅமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின்,  பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை  அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா (WMI) அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இசை பங்குதாரராக, கூட்டாளியாக இணைந்து செயல்படவுள்ளது. வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் அதன் வலுவான துவக்கத்தை, தெற்கு சந்தைகளில் வார்னர் மியூசிக் நுழைவை WMI இது குறிக்கிறது.Warner Music Inks Exclusive Distribution Signs Deal With Sky Digital Indiaபுத்தம் புது காலை விடியாதா… ஆல்பத்தில் 6 பாடல்கள் உள்ளன – ஒரு தலைப்புப் பாடல் மற்றும் ஒவ்வொரு கதைக்கும் ஒரு பாடல் வீதம் 5 பாடல்கள் உள்ளன. பன்முகத் திறமையாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜியின் தலைப்பு பாடலை உருவாக்கி பாடியுள்ளார். ரிச்சர்ட் ஆண்டனியின் ‘நிழல் தரும் இடம்’ படத்திற்கு பிரதீப் குமார் ஒரு பாடலை  இசையமைத்து பாடியுள்ளார். இயக்குநர் பாலாஜி மோகனின் ‘முககவச முத்தம்’ படத்திற்காக ஷான் ரோல்டன் ‘கிட்ட வருது’ பாடலை இசையமைத்து பாடியுள்ளார், ஹலிதா ஷமீமின் ‘லோனர்ஸ்’ படத்திற்காக கௌதம் வாசு வெங்கடேசன் ‘தனிமை என்னும்’ பாடலையும், சூர்யா கிருஷ்ணாவின் ‘தி மாஸ்க்’ படத்திற்கு கபேர் வாசுகியும், ‘முகமூடி’ பாடலை எழுதி, இசையமைத்துள்ளார். கார்த்திகேயா மூர்த்தி “விசிலர்” பாடலை இயக்குநர் மதுமிதாவின் “மௌனமே பார்வையாய்” படத்திற்காக இசையமைத்து பாடியுள்ளார்.
GV Prakash Kumar And His Musical Collaborations With Directors | Film  Companion

வெவ்வேறு மனநிலைகளை பிரதிபலிக்கும், வெவ்வேறு  பாணியிலான இசையில் அமைந்துள்ள, பல்வேறு இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் இசை, நேர்மறை எண்ணத்தை வளர்ப்பதாகவும், சிக்கலான சமயங்களை கடக்க உதவும், மனித ஆத்மாவின் சக்தியை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. புத்தம் புதுக் காலை விடியாதா… என்பது கடந்த ஆண்டு வெளியான ‘புத்தம் புதுக் காலை’ தொடரின் கதையை முன்னோக்கி எடுத்துச் செல்லும்  ஒரு தமிழ் தொடர் ஆகும், இது ஒவ்வொரு தனி நபரின் நம்பிக்கை மீதான பயணம் மற்றும் மனித உறவுகளுடன் கூடிய  புதிய தொடக்கங்ளை மையமாக கொண்ட கருப்பொருளில் கதைகளை சொல்கிறது. முதல் தொடரினைப் போலவே, இந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் என்பது 5 தனித்த கதைகளின் தொகுப்பாகும். இந்தியாவில் தொற்றுநோய் காலகட்டத்தின் போது, இரண்டாவது லாக்டவுனில் அமைக்கப்பட்ட கதைகளில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே (TeeJay), அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இத்தொடரை இயக்கியுள்ளனர். “புத்தம் புது காலை விடியாதா… “ அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 14, 2022 அன்று உலகமெங்கும் பிரத்யேகாமாக  வெளியாகிறது, இதன் இசை இப்போது அனைத்து மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது.

Previous Post

இதுவரை எந்த ஜானரிலும் வராத கதை இது… ‘கார்பன்’ இயக்குனர் சீனுவாசன்.

Next Post

அன்றே ஹிந்திப் பாடலை ஓரம்கட்டிய தமிழ் சினிமா.. எல்லா புகழும் இசைஞானிக்கே

Next Post

அன்றே ஹிந்திப் பாடலை ஓரம்கட்டிய தமிழ் சினிமா.. எல்லா புகழும் இசைஞானிக்கே

Popular News

  • அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்யன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒற்றுமையை வலியுறுத்தும் ‘RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் 10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.