• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் ! 

by Tamil2daynews
March 17, 2020
in சினிமா செய்திகள்
0
“அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் ! 
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் எனக் கூறப்படும் கேரள மண்ணின், சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன்,  பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து,  அனைத்து மக்களையும்  கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர்  ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம். மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று  தமிழில் ஒரு படம்  வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில்  மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளராக விளங்கும் 5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.


இது குறித்து தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறியதாவது…

மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப்படம் பார்த்து நானும் பிரமித்து போனேன். அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவு அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும். படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணிகளம், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி  கதையை தாங்கும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும் இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப்பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

Previous Post

*பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா*

Next Post

பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்ட யாஷிகா ஆனந்த்? வருத்தத்தில் அந்த நடிகர்..!

Next Post
பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்ட யாஷிகா ஆனந்த்? வருத்தத்தில் அந்த நடிகர்..!

பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்ட யாஷிகா ஆனந்த்? வருத்தத்தில் அந்த நடிகர்..!

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.