• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’ – தெலுங்கு படத்தினை நேரடி டிஜிட்டல் பிரீமியராக வெளியிட்டுள்ளது !!

by Tamil2daynews
January 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 தளம்  அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’ – தெலுங்கு படத்தினை நேரடி  டிஜிட்டல் பிரீமியராக வெளியிட்டுள்ளது !! 

 

இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங்  மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை  ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார்,  தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘அஜய் காடு’  அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக்  கைவிடும் அஜய், போதைக்கு அடிமையான மருத்துவரான ஸ்வேதாவை சந்திக்கிறான். அவன் வாழ்வு மாற்றத்திற்குள்ளாகிறது. அஜய் தனது உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வதையும் மற்றும் வெளி உலகத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துப் போராடுவதையும் ஒரு நெகிழ்ச்சி மிகு பயணமாக இப்படம் சொல்கிறது.  ZEE5 இல் ஜனவரி 12 முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
படத்தின் பிரீமியர் குறித்து அஜய் கர்துர்வார் கூறியதாவது..,
“‘அஜய் காடு’ படத்திற்காக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டது இன்னுமே நம்பமுடியாத த்ரில் பயணமாக இருந்தது. இந்த திரைப்படம்  என் இதயத்திற்கு மிக நெருக்கமான, ஒரு சிறப்பு மிகு படைப்பாகும்.  இந்த அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன், டிரெய்லர், படத்தின் சிறு அறிமுகத்தைத் தரும் படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது! சண்டைக்காட்சிகள், உணர்ச்சிகள் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு தீவிரமான படைப்பை உங்களுடன் பகிர்வதில்,  உற்சாகமாக உணர்கிறேன்.  இந்த துடிப்பு மிகு காதல் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும், ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் நம்புகிறேன்.  ஒரே நாளில் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய  இது மிகப்பெரிய பாலமாக அமையும்.  ‘அஜய் காடு’ அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்  படைப்பாக இருக்கும்.”

இப்படத்தில் நல்லமல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பானு ஸ்ரீ கூறியதாவது.., ” ஒரு அருமையான படைப்பில் அஜய் கர்தூர்வாருடன்  இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் அழுத்தமான திரைக்கதைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அவரது திறன் ஏற்கனவே என் ஆர்வத்தைத் தூண்டியது. படத்தில், பிரியா என்ற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். இப்பாத்திரம் கதைக்கு ஒரு தனித்துவமான சுவை  கூட்டும், மேலும் ZEE5 இல் திரைப்படத்திற்குப்  பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண  ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.
Previous Post

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ஆன்மாவைத் தொடும் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்!

Next Post

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

Next Post

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.