• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

by Tamil2daynews
March 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

 

மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.

நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் S.A.விஜயகுமார்.

இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இக்கால சூழலுக்கு எற்ப நடிகர் சமுத்திரக்கனி- யின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும்..

இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்கிறார். நடனம் தினா மாஸ்டர், சண்டை பயிற்சி வீர் விஜய், சேது ரமேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்,டிசைன்ஸ் அஞ்சலை முருகன்,மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P சண்முகம் தயாரிக்க, S. M.பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Previous Post

எழுத்தாளர் – இயக்குனர் பிரேம் குமார் அறிக்கை

Next Post

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

Next Post

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.