• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

by Tamil2daynews
September 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர்  துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

 

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
Imageபடம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக ‘காந்தா’ இருக்கும்” என்றார்.
வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனர்- நடிகர் துல்கர் சல்மான், “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை ‘காந்தா’வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு” என்றார்.
Imageஇயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், “இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. ‘காந்தா’ மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்” என்றார்.

சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக ‘காந்தா’ படம் உள்ளது. இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Previous Post

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!

Next Post

‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

Next Post

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.