• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

by Tamil2daynews
November 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

 

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில்,  நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,

நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது..,
இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார், ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா ?, அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார். ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் அகஸ்டின் பேசியதாவது..,
மேடையில் இருப்பது இது தான் முதல் முறை. The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள், நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும் போது, டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார். ஆனால் போகப் போக ஈஸியாகிவிட்டார். கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார், அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சஞ்சீவ் பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் கதிரவன் பேசியதாவது..,
இந்த படத்தின் ஒன் லைனை சந்துரு சார் சொன்ன போதே, இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன். இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம், கீர்த்தி மேடம், சந்துரு அனைவருக்கும் நன்றி. நான் என் திரை வாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார். இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகை அக்‌ஷிதா அஜித் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள்  ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக, இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம், மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள். கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார். அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம்,  படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல ரோல் தந்த இயக்குநருக்கு நன்றி.
இயக்குநர் JK சந்துரு பேசியதாவது..,
The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி.  ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள்  எல்லோருமே   நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக  பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த   காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.

சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகை  கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார்,  சூப்பர் சுப்பராயன், சுனில்,  அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன்,
அகஸ்டின், பிளேடு சங்கர்,  ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக  The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு

இயக்கம் – JK சந்துரு
ஒளிப்பதிவாளர் –  தினேஷ் கிருஷ்ணன் B
எடிட்டிங் –  பிரவீன் KL
கலை இயக்கம் – MKT
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்
நிர்வாக தயாரிப்பாளர் – வீர சங்கர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஐஸ்வர்யா சுரேஷ்
தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி
தயாரிப்பு நிறுவனம் –  The Route & Passion Studios
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Previous Post

சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

Next Post

ஒண்டி முனியும் நல்ல பாடணும் – விமர்சனம் ரேட்டிங்- 3.5 / 5

Next Post

ஒண்டி முனியும் நல்ல பாடணும் - விமர்சனம் ரேட்டிங்- 3.5 / 5

Popular News

  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி  மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன்  நம்பர்  2 “  படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

    திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாகம் பொறுப்பல்ல – விமர்சனம் ரேட்டிங் – 3.5/5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!

December 6, 2025

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

December 6, 2025

நிர்வாகம் பொறுப்பல்ல – விமர்சனம் ரேட்டிங் – 3.5/5

December 6, 2025

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு

December 6, 2025

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

December 5, 2025

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

December 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.