• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by Tamil2daynews
July 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது, “ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும்போது அதனை கொண்டாடுகிறோம். ஆனால், தமிழ் சினிமா என்று வந்து விட்டால் கமர்ஷியல் படங்கள்தான் என்ற ரீதியில் அணுகுகிறோம். அப்படி இல்லாமல் தமிழிலும் புத்திசாலித்தனமான கதைகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில்தான் ‘சிங்க்’ படமும் வந்துள்ளது. புதுமுயற்சியை ஊக்குவிக்கும் இடத்தில் ஆஹா தமிழை அனைவரும் வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான  விஷயம். வழக்கமான ஹாரர் ஜானர் படங்களின் கதையில் இருந்து ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
நடிகர் நவீன் ஜார்ஜ் பேசியதாவது,
“நண்பர்கள் மூலமாகதான் இந்தக் கதைக்குள் வந்தேன். படத்தின் திரைக்கதை படித்தபோது உண்மையாகவே ஆர்வமூட்டுவதாக இருந்தது. வழக்கமான ஹாரர் படங்களைப் போல இது இருக்காது. டீமாகவே எங்களுக்குள் சிங்க் நன்றாக இருந்தது. ஹாரர் படம் போல அல்லாமல் காமெடி படம் எடுப்பது போல ஜாலியாக வேலை பார்த்தோம். அழகான அனுபவமாக மாற்றித் தந்த படக்குழுவுக்கும், ஆஹாவுக்கும் நன்றி” என்றார்.

நடிகை மோனிகா,
“’சிங்க்’ படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக படக்குழுவுக்கு நன்றி! ஆஹாவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ‘சிங்க்’ மிகவும் ஆர்வமூட்டும் திரைக்கதையாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்”.

இசையமைப்பாளர் அபுஜித்,
“படப்பிடிப்பு 10-15 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. ஆனால், இசையைப் பொருத்தவரை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஒவ்வொரு ஆர்டிஸ்ட் டப்பிங்கின் போதும் அவர்களைச் சுற்றி 3-4 மைக் வைத்தோம். இதற்கு ஒத்துழைத்த எனது அணிக்கு நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு எங்களுக்கு ஆதரவு கொடுத்து வெளியிடும் ஆஹாவுக்கு நன்றி!”.

ஒளிப்பதிவாளர் சிவராம் பேசியதாவது,
“எல்லோரும் சொன்னதுபோல படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிவடைந்து விட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டோம். மற்ற படங்களின் சிஜி பணிகளை நாம் கேலி செய்கிறோம். அப்படி இருக்கும்போது, நம்முடையது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நண்பர்களோடு வேலை செய்யும் போது ஜாலியாக இருக்கும். எங்களின் படம் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பியது போலவே, ஆஹாவும் நம்பியது. உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு வேண்டும்”.
இயக்குநர் விகாஸ் ஆனந்த்,
“நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது என்பதால் பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் காம்ப்ரமைஸ் செய்தோம். நாங்கள் திட்டமிட்ட நேரம் தாண்டி படப்பிடிப்பு போனால் கூட நாங்கள் எங்களுக்குள் பேசி குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம். எங்களது திறமைக்கு ஆதரவு கொடுத்துள்ள ஆஹாவுக்கு எங்களது நன்றி”.

நடிகர் கிஷன் பேசியதாவது,
“என்னுடைய முதல் படமான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ’சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான். படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், ’ஓடிடியில் தான் ரிலீஸ் செய்ய உள்ளோம், பார்த்து விட்டு சொல்லுங்கள்’ என்று ட்வீட் ஒன்று போட்டேன். டிவீட் போட்ட ஐந்து மணி நேரத்திற்குள்ளேயே நித்திஷ் எங்களை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார். சுரேஷ் சந்திரா அப்பாவுடன் ஒரு புராஜெக்ட்டில் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்றார்.

Previous Post

’கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

Next Post

வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.