ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்ற ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
‘மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். சரியான கதையும் இயக்குனரும் அமையவில்லை. அதனால்தான் அண்ணாத்தக்குப் பிறகு இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.’ என்றவர் நெல்சனிடம் கதை கேட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘நெல்சனை கதை சொல்ல 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் 11:30 மணிக்கு வரவா என்றாத். ஆனால், 12 மணி வரை ஆபிஸ் பக்கமே வரவில்லை. அதன்பிறகு, வந்தவர் உடனே நல்லதாக ஒரு காபி கொடுங்கனு கேட்டார். குடிச்சிட்டு கதையோட ஒன்லைன் சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு. ‘இவன் ஹீரோவா எப்டி?’ ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு.
அதுக்கு நெல்சன், ‘கதை தான் முடிவு பண்ணியாச்சு உங்களை சார்ஜ் ஏத்தணும்’ என்று சொன்னார்.
அதுக்காக நம்ம லவ் ஸ்டோரி சொல்லணுமா ? என்று கேட்டேன்.
நெல்சன் நல்ல நகைச்சுவையாகப் பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார்.
பின்னர் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய ரஜினிகாந்த், ‘குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். ‘குடிப்பழக்கம்’ எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது.
அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல.” என்றார்
இதையடுத்துப் பேசிய ரம்யா கிருஷ்ணன், “24 வருசத்துக்குப் பிறகு ரஜினி சார் கூட படம் பண்ணுறேன். எனக்கு நிறைய வித்தியாசமானக் கதாபாத்திரங்கள் கிடைக்க மிக முக்கிய காரணமா அமைந்தது படையப்பா படம்தான். ரஜினி சாரோட எனர்ஜி, ஒழுக்கம்னு எதுவுமே மாறல. ரஜினி சார்தான் முதல்ல செட்டுக்கு வருவார். அவர்தான் கடைசியா போவார். அப்ப பார்த்த மாதிரியே இருக்காரு. இப்போ இருக்குற இயக்குநர்கள் எல்லாம் நைட் ஷூட் தான் அதிகம் ஆர்வம் காட்டிட்டு இருக்காங்க ” என்று கூறினார்.
‘படையப்பா படத்துல பழி வாங்குவேன் சொல்லி தான் முடிப்பீங்க? இந்தப் படத்தல அதைப் பண்ணிருக்கீங்களா’ என்று கேட்க, அதற்கு ரம்யா கிருஷ்ணன், “அதை ஆகஸ்ட் 10-ம்தேதி பாப்பீங்க” என்றார்
இவ்விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் கவின் யோகிபாபுவிடம், ‘நெல்சனுக்கு மட்டும் டேட் கரெக்ட்டா தரீங்களாமே ?’ என்று கேட்க, அதற்கு யோகி பாபு, “50 நாள் டேட் கேட்டாரு, 50 நாளும் விடமா வந்துட்டேன்.
கோலமாவு கோகிலா 2 வரும் என்று சொல்லிருக்கார். பார்போம்..!” என்று கூறினார்.
` ரஜினி சாரைப் போய் மீட் பண்ணு!” விஜய் குறித்து நெகிழ்ந்த நெல்சன்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இயக்குநர் நெல்சன், “ஜானி மாஸ்டர் பேசுறது எனக்குப் புரியாது. நான் பேசுறது அவருக்கு புரியாது. அவர் 5 மொழி கலந்து ஒண்ணா பேசுவாரு. ஆனா நாங்க 4 பாட்டு பண்ணிட்டோம். நான் என்னமோ பெரிய இயக்குநர் மாறி ஒரு பீல் கொடுப்பாரு அனிருத்.
தமன்னா மேம்க்கு இதுல சின்ன ரோல் தான். அதை நல்லா பண்ணிக் கொடுத்திருங்க. எத்தனை ஹீரோயின் இதுக்கு ஒகே சொல்லுவாங்க தெரியல” என்றார்.
மேலும் விஜய் குறித்துப் பேசிய நெல்சன், “விஜய் சார்தான் முதல்ல எனக்கு நம்பிக்கை கொடுத்தாரு. ரஜினி சாரைப் போயி மீட் பண்ணுங்க அவர் கட்டாயம் படம் பண்ணுவாருனு சொன்னாரு” என்று பேசியுள்ளார்.
நிகழ்வில் பங்கேற்ற ரெடின் கிங்ஸ்லி, “மத்தவங்க எப்படி வேணாலும் கூப்பிடட்டும்.நான் தலைவர்னுதான் கூப்பிடுவேன்.வணக்கம் தலைவா!
கேரவன் பக்கம் போகவேயில்ல.வெயில் அடிச்சாலும் இயற்கை இதுதான்னு சிம்பிளா இருப்பாரு. தலைவர்க்கு நெல்சன ரொம்ப பிடிக்கும்.கடைசி நாள் படபிடிப்புல ‘I miss you nelson’னு சொன்னாரு. தளபதி விஜய்-க்கு அப்புறம் தலைவர் கிட்ட தான் அந்த ஒழுக்கத்த பார்த்தேன். படம் பெரியளவுல ஹிட் ஆகும்.” என எதிர்ப்பார்ப்பை அதிகரித்துவிட்டு மேடையிலிருந்து விடைபெற்றார்.
“ரஜினி சார்கூட இருந்தா எங்க அப்பாகூட இருந்த மாதிரி இருக்கு” – விக்னேஷ் சிவன்”
விழா மேடையில் பேசிய விக்னேஷ் சிவன், “எவ்ளோ சம்பாதிச்சாலும், ஒரு சில மொமன்ட்காகத் தான் காத்திருப்போம். கடந்த ஆண்டு இதே தேதி எங்க அப்பா இறந்த நாள். அப்போ செஸ் ஒலிம்பியாட் டைம், அப்பவும் தலைவர் வந்தாரு, அவரைப் பார்த்தேன். இப்போ அவர் முன்னாடி நிக்கிறேன். எங்க அப்பா என் கூட இருக்க மாதிரியிருக்கு. உங்களுக்கு மியூசிக் போடும் போது மட்டும் அனிருத் வேற லெவல்ல இறங்கிடுறாரு!” என்று சிரித்தார்.
`சின்ன வயசுல சபரிமலைக்கு ரஜினி சார் கையை பிடிச்சிட்டுதான் போனேன்’- சிவராஜ்குமார்
மேடையேறிய சிவராஜ் குமார், ” நான், பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாமே சென்னைலதான். அதனாலயே சென்னையை ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பாகூட ஒரு நாள் சபரிமலைக்கு போனப்போ, சின்னப்பையனா நான் ரஜினி சார் கையைப் பிடிச்சிட்டுதான் போனேன். அப்போ காட்டுன அதே அன்பை அவர் இப்போவும் காட்டுறாரு. அவர் என்னோட சித்தப்பா மாதிரினு சொன்னாலும் தப்பா இருக்காது.”