• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதலிலும் மாற்றங்கள் செய்யும் அரசியல்!

by Tamil2daynews
January 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதலிலும் மாற்றங்கள் செய்யும் அரசியல்!

 

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது.

“நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது”

என்கிறார் இயக்குநர் தமிழ். ‘ஹிருதயம்’, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், ‘கனா’ புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.

இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:
திரைக்கதை & இயக்கம் : தமிழ்,
கதை & வசனம் : பெருமாள் முருகன்
தயாரிப்பு : செ. வினோத்குமார்,
ஒளிப்பதிவு : தீபக்,
இசை: பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ்,
படத்தொகுப்பு : கண்ணன்,
கலை வடிவமைப்பு : பி. ஜெயமுருகன்
ஒலிப்பதிவு : அந்தோனி பி. ஜெ. ரூபன்,
சண்டைப்பயிற்சி : பில்லா ஜெகன்,
உடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: திவாகர். ஜெ,
விளம்பர வடிவமைப்பு : சிவா
மக்கள் தொடர்பாளர் : சுரேஷ் சந்திரா,
நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்

Previous Post

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

Next Post

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.