எங்களின் சமீபத்திய படைப்பான விஎம் ஒரிஜினல்ஸ் – சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! 5 பாடல்கள் கொண்ட இந்த இசைத் தொடரில் சிவாங்கி, ஹர்ஷவர்தன் வித்யாசாகர், ஆதித்யா ஆர்.கே, நித்யஸ்ரீ மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா உட்பட பல திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். அனைத்து பாடல்களையும் டைனமிக் ட்வின் இசையமைப்பாளர்களான விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் அனைத்தும் இப்போது VIVEK MERVIN MUSIC YOUTUBE சேனலில் கிடைக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருக்கும் வகையில் உயர்தர இசையை உருவாக்குவதில் விஎம் ஒரிஜினல்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’, விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ மற்றும் கார்த்தியின் ‘சுல்தான்’ ஆகிய படங்களுக்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படங்களில் விவேக்- மெர்வினின் ஹிட் பாடல்களான சில் ப்ரோ, வா சுல்தான், குலேபா, கமலா கலாசா, சேராமல் போனால், யாரையும் இவ்வளோ அழகா பாக்கல போன்ற பாடல்கள் ஹிட்டடித்தது.
இதுபற்றி பேசும்போது, “சினிமாப் பாடல்களோடு எங்களின் தனியிசைப் பாடல்களான ஒரசாதா, காண்டு கண்ணம்மா போன்ற பாடல்களின் ஹிட்டும் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்கின்றனர். சினிமா இசையமைப்பாளர்கள் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர்களாக நாங்கள் இருவரும் புது இசையைக் கொடுக்க பல எல்லைகளைத் தகர்க்க வேண்டியுள்ளது.
எங்களின் வெற்றியை பற்றி பேசும் இந்த வேளையில் எங்களின் வரவிருக்கும் திட்டங்களைப் பற்றிய சில வார்த்தைகளையும் உற்சாகமாக பகிர்ந்து கொள்கிறோம்.
– விஜய் ஆண்டனியுடன் ‘ஹிட்லர்’
– முகேன் ராவுடன் ‘ஜின்’
– காளிதாஸ் ஜெயராமுடன் ‘நிலா வரும் வேளை’
– சுயாதீன இசைப்பாடல்கள்
– VYRL South உடன் இசை வீடியோ போன்றவை எங்கள் கைவசம் உள்ளது.
எங்கள் இசை, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் யூடியூப் மற்றும் பிற தளங்களில் 6 மில்லியன் + பார்வைகளை பெற்றிருக்கிறது.
உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். விஎம் ஒரிஜினல்ஸில் இருந்து மேலும் அற்புதமான பாடல்களுக்கு காத்திருங்கள்” என்றனர்.