• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது!

by Tamil2daynews
February 22, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது!

 

நடிகர் சூர்யா வரவிருக்கும் தனது ‘கங்குவா’ படத்துக்கான டப்பிங்கை பிரபல தயாரிப்பாளரான கே.ஈ ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார்.

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.  நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகச்சிறந்தப் படைப்பாக இந்தப் படம் இருக்கும். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா படத்தைத் தயாரிக்க, இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா படத்தை இயக்கியுள்ளார்.Image

அசத்தலான லொகேஷன், ஆடம்பரமான செட் மற்றும் பிரம்மாண்டமான புரொடக்‌ஷன் டிசைனை ‘கங்குவா’ கொண்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, தனது அன்பு மகள் பெயரில் தொடங்கியுள்ள ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோ உலகத்தரத்தில் அமைந்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது. சிறப்பான சினிமா அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என ரசிகர்களுக்கு படக்குழு உறுதி கொடுக்கிறது.

‘கங்குவா’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்க, பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். ’அனிமல்’ படத்தில் தனது நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்ற பாபி தியோல் இதில் வில்லனாக மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாது நடிகர்கள் நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஐகானிக் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அவர்தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Previous Post

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் பாடல் ‘செல்லக்கிளி’ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Next Post

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் 28 மார்ச், 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் 'தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் 28 மார்ச், 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.