• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

by Tamil2daynews
October 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்,  மாஸ் எண்டர்டெயினர்  “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

 

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.  மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது.

இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக  எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை  தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.

மட்கா திரைப்படத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகக் கடினமான சவாலை எதிர்கொண்டு நடித்துள்ளார் வருண் தேஜ், இளமை முதல் முதுமை வரையிலான கதாபாத்திரத்தின் பயணத்தை வெளிப்படுத்தும் கதையில்,  நான்கு வித்தியாசமான மேக்ஓவர்களுடன் மாறுபட்ட தோற்றங்களில் கலக்கியுள்ளார்.  ஒவ்வொரு லுக்கிலும் அவரது உடல் மொழியும், டயலாக் டெலிவரியும், நம்மை  மயக்குகிறது. அவர் தனது பதின்ம வயதிலும், இருபதுகளிலும் உள்ள இளைஞனாக தூள் கிளப்புகிறார், அதே சமயம் நடுத்தர வயதுடைய நபராக, அவர் மாறுவது நம்ப முடியாத  வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.  மேலும்  வயதான தோற்றம் நம்மை மிரட்டுகிறது. ஒரு முக்கிய சண்டைக் காட்சியின் போது பூர்ணா தியேட்டர் மற்றும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் கட்அவுட் உள்ளிட்டவை காட்டப்படுவது, நம் ஆவலைத் தூண்டுகிறது.
Imageஇந்த டீஸர் நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களையும் அறிமுகப்படுத்துகிறது.

கருணா குமார் முதல் முறையாக ஒரு வெகுஜன வணிக விஷயத்தை திறமையாக கையாண்டு திரையில் அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளார்.  மாஸ் பஞ்ச் மற்றும் அழுத்தமான டயலாக்குகள்  அடங்கிய  அவரது கதைசொல்லல் மிக வித்தியாசமானது, இயக்குனரின் பார்வை மற்றும் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில்,  பழமையான காலகட்டம் தத்ரூபமாக திரையில் விரிகிறது.

ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் தனது தனித்துவமான திறமையில், மாறுபட்ட காலகட்டங்களை வெகு அற்புதமாக படம்பிடித்துள்ளார், அதேசமயம் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அட்டகாசமான ஸ்கோர் மூலம், ஹீரோயிசத்திற்கும், கதைக்கும் வலு சேர்த்துள்ளார். எடிட்டர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R, மிகச் சிறப்பாக எடிட் செய்துள்ளார்.  உலகளாவிய அளவிலான தரத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.

இந்த டீஸர் ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.  எதிர்கால விளம்பரங்களில் கதாநாயகனின் பரிமாணத்தை பற்றி இன்னும் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மட்கா  திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

Previous Post

தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை பின்னணியில் உருவான கலன்.

Next Post

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Next Post

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.