• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படம் “ரேவன்”

by Tamil2daynews
August 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டாடா புகழ்  இயக்குநர் கணேஷ் K பாபு  திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படம் “ரேவன்” 

 

MG STUDIOS தயாரிப்பில்,டாடா இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும்   “ரேவன்”  படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் இனிதே துவங்கியது !!

MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர்  கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும்  “ரேவன்”  திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள,  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S. S. லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம்,  அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக  “ரேவன்” படம் உருவாகிறது. டாடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராக பணியாற்றிய, கல்யாண் K ஜெகன் இயக்குநராக அறிமுகாகிறார்.
அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில்,  நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒரே கட்டமாக  படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது.

“ரேவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழிழ் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – MG STUDIOS
தயாரிப்பு – APV. மாறன், கணேஷ் K பாபு.
இயக்கம் – கல்யாண் K ஜெகன்
கதை, திரைக்கதை – கணேஷ் K பாபு.
ஒளிப்பதிவு – ரவி சக்தி
இசை அமைப்பாளர் – மனு ரமீசன்
எடிட்டர் – கதிரேஷ் அழகேசன்
கலை இயக்கம் – சண்முக ராஜா
நிர்வாக தயாரிப்பு – மீனா அருணேஷ்
ஒலி வடிவமைப்பு – அருணாசலம் சிவலிங்கம்
ஸ்டன்ட் – நைஃப் நரேன்
டிசைன்ஸ் – விக்ராந்த்
ஆடை வடிவமைப்பாளர் – காயத்திரி பாலசுப்பிரமனியன்
ஸ்டில்ஸ் – குமரேசன்
சிஜி – NxGen Media
மக்கள் தொடர்பு – திருமுருகன்,  பரணி அழகிரி
Previous Post

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Next Post

‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்

Next Post

'ஜவான்' படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்

Popular News

  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.