
தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக வரும் புது முக நடிகைகள் எல்லோரிடமும் ஏதாவது ஒரு லட்சியம் நிச்சயமாக இருக்கும்.


‘நகைச்சுவை மன்னன்’ கவுண்டமணி காமெடியில் வரும் வசனத்தைப் போல பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா, இந்த தீ பந்தம் ஏதும் வேண்டாமா
என்பது போல இல்லாமல் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் நடித்து முன்னேற முடியும் என்கிற மாயையில் இருக்கும் சில நடிகைகளை ஓரம் கட்டி விட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்னால் சின்ன, சின்ன கதாபாத்திரத்தை கூட படம் பார்ப்பவர்களில் கண்களை கவரும் விதமாக என்னுடைய நடிப்பு இருக்கும்
என்று நிரூபித்து இருக்கிறார் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘லத்தி’ திரைப்படத்தில்.
பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண்ணை போல காட்சியளிக்கும் இந்த பிரணா பழகுவதற்கும் நல்ல குணம் உள்ளவராக இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் சிறு,சிறு கதா பாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் முகமோ, பெயரோ வெளியில் சரியாக தெரியவில்லை.
ஆனால் இவரின் திறமையை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் லத்தி பட இயக்குனர் A.வினோத்குமார்.
நல்லவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் லேட்டா தான் கிடைக்கும் ஆனால் நல்ல கதைகளாக,நல்ல கதாபாத்திரங்களாக கிடைக்கும் வரும் காலங்களில்.
இனி நடிகை பிரணாவுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைப்பது உறுதி.