‘காந்தி கணக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர் தான் இந்த ரமணா.
நட்பின் அடையாளமாக நடிகர் விஷால் நடிக்க ரமணாவும், நந்தாவும் இணைந்து ராணா புரொடக்சன் என்ற சினிமா கம்பெனியை ஆரம்பித்து ‘லத்தி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளர்களாக உயர்ந்தார்கள்.
நீண்ட தலைமுடியுடன் வாட்டசாட்டமான நல்ல உடற்கட்டுடன் படத்தில் பார்க்கவே இவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தும்.
கதாநாயகனால் பாதிக்கப்பட்டு தன் முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி இருக்கும் ரமணா அவனை பழி தீர்த்த பின்பு தான் இந்தப் கவரை எடுப்பேன் என்று கூறும் அந்த காட்சியிலும் அந்த பையில் சிறு ஓட்டையுடன் அவர் கதாநாயகனை உற்று கவனிக்கும் அந்த காட்சியும் அபாரம்.
தான் தயாரித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இந்த ரமணா நிச்சயமாக தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடம் காத்துக் கிடக்கிறது.
நடிப்பால் சாதிக்க நினைக்கும் நல்ல நடிகர்களை தமிழ் சினிமாவும் தமிழ் சினிமா ரசிகர்களும் எப்பொழுதும் கைவிட மாட்டார்கள்.