டீசல் – விமர்சனம்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பு முடிந்து பெட்டியில் இருந்து ரிலீஸ் ஆகி இருக்கும் டீசல் படத்தின் விமர்சனத்தை காணலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சாய்குமார் நடித்திருக்கிறார் அவர் தனது கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். அவரோடு நம்பிக்கையை நட்சத்திரமாக வரும் நடிகர் கருணாசும் நடிப்பில் ஓகே ரகம்.
படத்தின் பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லலாம். பாடல்களில் கானா பாடல் ஏற்கனவே ஹிட் அடித்ததால் தியேட்டர்களில் கேட்க முடிகிறது.
ஒரு கட்டத்தில் இந்தப் படத்திற்கு கதாநாயகி தேவையா என்று கேட்கும் அளவுக்கு அதுல்யா ரவியின் முகம் விகாரமாக இருக்கின்றது ஒவ்வொரு பிரேமிலும்.
வில்லனாக வினை அவருக்கு இணையாக அண்ணன்யா வினை வழக்கம்போல் ஹீரோவுக்கு எதிராக வந்தாலும் கடைசியில் தமிழ் பட வில்லனாக மாறுகிறார் அவருக்கு இணையாக வரும் அனன்யா ஒரு வார்த்தையாவது பேசமாட்டாரா என்று ஏங்கும் ரசிகர்களுக்கு கடைசியாய் விடை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
வடசென்னையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் விசுவாசிகளின் கதையாகவே இந்த டீசல் அமைந்திருக்கின்றது.
மத்திய அரசு போடும் பல திட்டங்களை ஒரு சாமானிய சாதாரண மனிதன் முறியடிக்க முடியுமா என்ற பல கேள்விகளும் அரசியல்வாதிகளுக்கும் மந்திரிகளுக்கும் இடையே ஹீரோ எப்படி நின்று ஜெயிக்கிறார் என்ற சந்தேகம் படம் பார்க்கும் எல்லோருக்குமே வருவது நிச்சயம்.
மொத்தத்தில் புலி பிடிக்க பூனைவால் போதும் என்ற கதையாகி விட்டது.